என்.எல்.சி. பங்குகள் விற்பனை- மதிமுக, மார்க்சிஸ்ட் கண்டனம்
சென்னை: நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனமான என்.எல்.சியின் 5% பங்குகளை விற்பனை செய்யும் மத்திய அரசின் முடிவுக்கு மதிமுக, மார்க்சிஸ்ட் கட்சிகள் கடும் எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்துள்ளன.
வைகோ கண்டனம்
மதிமுக பொதுச்செயலர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவின் பொதுத்துறை நிறுவனங்களில் நவரத்னா தகுதி பெற்று தனிச்சிறப்புடன் தமிழகத்திற்குப் பெருமை சேர்க்கும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் 5 சதவிகிதப் பங்குகளைத் தனியாருக்கு விற்பனை செய்திட மத்திய அரசு எடுத்துள்ள முடிவு வன்மையான கண்டனத்துக்கு உரியதாகும்.
ஆண்டுக்கு ரூ. 1,400 கோடி இலாபம் ஈட்டும் என்.எல்.சி. நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்து, வெறும் ரூ. 466 கோடி திரட்டி மத்திய அரசு என்ன செய்யப்போகிறது. மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசின் உண்மையான நோக்கம் என்.எல்.சி. நிறுவனத்தைப் படிப்படியாக தனியாருக்குத் தாரை வார்க்க வேண்டும் என்பதுதான். மின்சாரத் தேவைக்காக தமிழக மக்கள் தவித்துக்கொண்டிருக்கும் பொழுது, மிகக் குறைந்த விலையில் தமிழ்நாட்டிற்கு மின்சாரம் அளிக்கும் என்.எல்.சி. தனியார்மயமானால் தமிழக அரசு அதிக விலை கொடுத்து அங்கு உற்பத்தி ஆகும் மின்சாரத்தை வாங்க வேண்டி வரும். இதனால் ஏற்படும் சுமை முழுவதும் மக்கள் மீதுதான் ஏற்றப்படும்.
நாட்டின் வளங்களைக் கொள்ளை அடிப்பதிலேயே குறியாக இருக்கும் மத்திய காங்கிரÞ கூட்டணி அரசு, 2 ஜி அலைக்கற்றை ஊழலில் ரூ. 1.76 இலட்சம் கோடி, நிலக்கரி ஊழலில் ரூ. 1.86 இலட்சம் கோடி, இன்னும் பல்வேறு ஊழல்களின் மூலம் நாட்டிற்கு பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் இழப்பை நாட்டுக்கு ஏற்படுத்தியிருக்கிறது. தற்போது என்.எல்.சி. போன்று நாட்டுக்குப் பயன்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனங்களைச் சீரழித்து, தனியாருக்குத் தாரை வார்க்க துடித்துக்கொண்டிருக்கிறது.
என்.எல்.சி. பங்குகளை விற்பனை செய்யும் மத்திய காங்கிரஸ் அரசின் முடிவு தமிழ்நாட்டுக்கு இழைக்கப்படும் மேலும் ஒரு துரோகமாகும். என்.எல்.சி. தொழிலாளர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கி உள்ள மத்திய அரசு, உடனடியாக 5 சதவிகித பங்குகள் விற்பனை முடிவைக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இதேபோல் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் நேற்று வெளியிட்ட அறிக்கையில். என்.எல்.சி.யின் 5 சதவீத பங்குகளை விற்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. நிதிப்பற்றாக்குறையைச் சமாளிக்க எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையின் மூலம் அரசுக்கு ரூ. 466 கோடி கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொருளாதாரச் சீர்திருத்தங்கள் வேகமாக செயல்படுத்தப்படும் என பிரதமரும், நிதி அமைச்சரும் அறிவித்த பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன்பு என்.எல்.சி.யின் 10% பங்குகளை விற்க முயற்சித்த போது, மக்களின் எதிர்ப்பைக் கண்டு அந்த முயற்சியில் இருந்து மத்திய அரசு பின்வாங்கியது. இடதுசாரி கட்சிகளின் எதிர்ப்பு காரணமாக மத்திய அரசுக்கு ஆதரவான கட்சிகள் கூட தங்களது எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.
என்.எல்.சி.யின் பங்குகளை விற்க அரசு முடிவு செய்துள்ள செய்தி வெளியானதும் கடந்த மாதமே மார்க்சிஸ்ட் தனது எதிர்ப்பை தெரிவித்தது. பங்கு விற்பனையை கைவிடுமாறு தமிழக முதல்வரும் பிரதமருக்கு கடிதம் எழுதினார். தொழிற்சங்கங்களும் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால், அனைத்துத் தரப்பினரின் எதிர்ப்பையும் மீறி மத்திய அரசு எடுத்துள்ள இந்த முடிவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு வன்மையாகக் கண்டிக்கிறது. பொதுத்துறையை அழித்து தனியார்மயத்துக்கு வலுவூட்டும் மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிராக அனைவரும் போராட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications