நான் வாயைத் திறந்தேன், நாறிப் போய்டும்.. பாஜகவுக்கு நிதீஷ் எச்சரிக்கை
Subscribe to Oneindia Tamil

நேற்று பாட்னா வந்த பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்திய அரசியலை விட்டே ஐக்கிய ஜனதாதளம் அழிக்கப்படும் என்று கடுமையாக வர்ணித்திருந்தார்.
இதற்கு இன்று நிதீஷ் குமார் காட்டமாக பதிலளித்துள்ளார். அவர் கூறுகையில், நான் வாயைத் திறக்க முடிவு செய்தால், பாஜகவில் பல தலைவர்களுக்கு பலவிதமான சிக்கல்கள் வரும் என்றார் அவர்.
ஒரு வாரத்திற்கு முன்புதான் 17 வருட கால ஐக்கிய ஜனதாதளம்- பாஜக கூட்டணி உடைந்து போனது. இதையடுத்து சட்டசபையில் தனது அரசின் பெரும்பான்மை பலத்தை நம்பிக்கை வாக்கெடுப்பின் மூலம் நிரூபித்தார் நிதீஷ் குமார் என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications