வெள்ளத்தில் தத்தளிக்கும் உத்தரகண்டில் கொட்டுகிறது மழை: மீட்பு பணிகள் நிறுத்தம்
டேராடூன்: ஏற்கனவே வெள்ளத்தில் தத்தளிக்கும் உத்தரகண்ட் மாநிலத்தில் இன்று காலை முதல் கன மழை பெய்வதால் மீட்பு பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
உத்தரகண்ட் மாநிலத்தில் கடந்த வாரம் பெய்த கன மழையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதுடன் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 5,000க்கும் மேற்பட்டோர் இறந்திருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. மேலும் சுமார் 10,000 பேர் ஆங்காங்கே சிக்கித் தவிக்கின்றனர். அவர்களை மீட்கும் பணிகள் நடந்து வந்தது.

லேசான மழை
நேற்று மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. இதனால் மீட்பு பணிகள் சற்று பாதிக்கப்பட்டது.

இன்று கன மழை
இன்று கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதே போன்று இன்று காலை முதல் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் கன மழை பெய்து வருகிறது. இதனால் மீட்பு பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

5,000 பேர் பலி?
வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 1,000 முதல் 5,000 பேர் உயிர் இழந்திருக்கக்கூடும் என்று உத்தரகண்ட் முதல்வர் விஜய் பகுகுனா தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications