நலம்... நலமறிய ஆவல்...: மனைவிக்கு கடிதத்தில் ‘காதல்’ பரிமாறும் சஞ்சய்தத்

Subscribe to Oneindia Tamil

புனே: சிறையில் வாழும் நடிகர் சஞ்சய் தத் தனது மனைவிக்கு தினமும் ஒரு கடிதம் எழுதி அனுப்பி விடுகிறாராம். அவரின் ஒவ்வொரு கடிதத்துக்கும் அவரது மனைவி பதில் கடிதம் எழுதுகிறாராம்.

சஞ்சய் தத்தின் வீட்டிற்சு சமீபகாலமாக தினந்தோறும் சென்று கடிதம் கொடுத்து வருகிறாராம் தபால்காரர். திரைப்படங்களில் காட்டுவது போல, சஞ்சய் தத்தின் மனைவிக்கு தினமும் கடிதம் எழுதுகிறாராம் சஞ்சய்தத்.

சிறையில் வாழ்வதால், வேறு எந்த முறையிலும் மனைவியை தொடர்பு கொள்ள இயலாமல் தவிக்கும் சஞ்சய் தத், தினந்தோறும் கடிதம் எழுதுகிறாராம்.

வீடு... மனைவி.. மக்கள்...

வீடு... மனைவி.. மக்கள்...

பாலி ஹில்ஸ்ல் உள்ளது சஞ்சய் தத்தின் வீடு. தற்போது அங்கு சஞ்சயின் மனைவி மானயதா தத் தனது குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.

என் வீட்டில் இரவு. அங்கே...

என் வீட்டில் இரவு. அங்கே...

மும்பை குண்டு வெடிப்பு வழக்கில், குற்றம் நிரூபிக்கப்பட்டதால் கடந்த மே16 சிறைக்குச் சென்றார் சஞ்சய் தத். தற்போது புனேயில் உள்ள யெரவாடா சிறையில் வசித்து வருகிறார் சஞ்சய்.

தனிமை கொடுமையே...

தனிமை கொடுமையே...

ஒரு மாத காலம் வீட்டு உணவு மற்றும் சில சலுகைகளுடன் வாழ்ந்த சஞ்சய் தத், தற்போது மற்ற கைதிகளைப் போல் சாதாரண வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். மனைவி மட்டும் குறிப்பிட்ட நாட்களில் வந்து பார்க்கலாம் என்ற சலுகை உள்ள போதும், தனிமையில் வாடுவதாக உணர்கிறாராம் சஞ்சய்.

உன் முகம் நான் காண கடிதமே தானா...?

உன் முகம் நான் காண கடிதமே தானா...?

இதனால், தனது ஓய்வு நேரங்களில் தனது மனைவி மானயாதத்க்கு கடிதம் எழுத அமர்ந்து விடுகிறாராம். தினமும், தனது எண்ணங்களை கடிதம் வாயிலாக மனைவிக்கு தெரியப்படுத்தி விடுகிறாராம்.

பதில் கடிதம்...

பதில் கடிதம்...

மானயாதத்தும் தனது கணவரின் கடிதத்துக்கு தினமும் பதில் எழுதி விடுகிறாராம். சமீபத்தில் தனது குழந்தைகளை அழைத்துக் கொண்டு சஞ்சய்தத்தை நேரில் சந்தித்தாராம் அவர்.

உணர்ச்சிகரமான சந்திப்பு...

உணர்ச்சிகரமான சந்திப்பு...

மிகவும் உணர்ச்சிகரமான சந்திப்பாக அது இருந்ததாம். மேலும், கடிதம் வாயிலாக தனது குழந்தைகள் மற்றும் வீட்டு செயல்பாடுகளை அறிந்து கொள்கிறாராம் சஞ்சய்.

கடிதத்தில் வாழ்க்கை...

கடிதத்தில் வாழ்க்கை...

சிறையில் இருந்து செல்லும் சஞ்சய்தத்தின் கடிதம் சாதாரண தபாலிலேயே அனுப்பப் படுகிறதாம். ‘வார்த்தையில் தெரியாத வடிவமும் நானா'னு எழுதுவீங்களா சஞ்சய்?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+