முரசொலி கட்டுரை எழுதியதற்கு அவதூறு வழக்கு: ஆஜராக கருணாநிதிக்கு விலக்கு
Subscribe to Oneindia Tamil

திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் அமைச்சர்கள் பச்சைமால், கோகுல இந்திரா, அமைச்சர் சிவபதி ஆகியோரை விமர்சித்து கட்டுரை எழுதியதாக தி.மு.க. தலைவர் கருணாநிதி மீது கடந்த டிசம்பர் மாதம் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி சொக்கலிங்கம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, தி.மு.க தலைவர் கருணாநிதி சார்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
அதில், அவதூறு வழக்கில் நேரில் ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி சொக்கலிங்கம், அமைச்சர்கள் தொடர்ந்த அவதூறு வழக்கில் கருணாநிதி நேரில் ஆஜராக தேவையில்லை என்று விலக்கு அளித்து உத்தரவிட்டதோடு விசாரணையை ஜூலை 30ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.












Click it and Unblock the Notifications