1300 ஆண்டுகளுக்கு முன்பே தேவாரப் பாடல்கள் போற்றிய கேதார்நாத் எனும் திருக்கேதாரம்!
சென்னை: உருக்குலைந்து கிடைக்கிறது உத்தர்நாத்.. இனி 3 ஆண்டுகளுக்கு நான்குபடை வீடு யாத்திரை அல்லது சார் தாம் யாத்திரை என்ற இமயமலை யாத்திரையை நினைத்துக் கூட பார்க்க முடியாது.. குறிப்பாக பல கிலோ மீட்டர் மிக அபாயகரமான பாதையில் பயணித்தாலும் தரிசித்தே ஆக வேண்டும் என்ற கேதார்நாத் திருக்கோயிலை மீண்டும் பழைய நிலையில் பார்க்க முடியுமா என்பது கேள்விக்குறி...
உத்தர்காண்ட்டில் இமயமலை யாத்திரை சென்றோரில் ஆயிரக்கணக்கான தமிழ்நாட்டவரும் அடக்கம்..குறிப்பாக இவர்களில் பலரும் கேதார்நாத் செல்லும் வழியில் சிக்கியவர்கள்...தமிழகத்துக்கும் கேதார்நாத்துக்கும் இன்று நேற்றைய உறவு அல்ல.. 1300 ஆண்டுகளுக்கு முந்தைய உறவு...
அப்பரும் சுந்தரரும் திருஞானசம்பந்தரும் அருளித் தொகுத்தவை தேவாரப் பாடல்கள்.. இதில் மொத்தம் 122 திருத்தலங்கள் பற்றி பாடப்பட்டிருக்கின்றன. இந்த 122 திருத்தலத்தில் இப்போது உருக்குலைந்து போன கேதார்நாத்தும் அடக்கம். திருக்கேதாரம் என்று தேவாரப் பாடல்கள் குறிப்பிடுபவை அனைத்துமே கேதார்நாத்தையே..

கேதார்நாத் பதிகம்
கேதார கௌரியம்மை உடனுறை கேதார நாதர் என்றே தமிழ் ஆன்மீகம் கேதார்நாத் சிவனை வழிபடுகிறது. திருஞானசம்பந்தரும் சுந்தரமூர்த்தி நாயனாரும் காளகஸ்தி எனும் திருக்காளத்தி மலை மீது நின்றே கேதார்நாத்தை வழிபாடு செய்ததாக அவர்தம் பாடல்கள் கூறுகின்றன. இத்திருத்தலத்துக்கு 2 பதிகங்கள் இருக்கின்றன.

முதலாவது பாடல்
வாழ்வாவது மாயம்மிது மண்ணாவது திண்ணம்
பாழ்போவது பிறவிக்கடல் பசிநோய்செய்த பறிதான்
தாழாதறஞ் செய்ம்மின்தடங்
கண்ணான்மல ரோனும்
கீழ்மேலுற நின்றான்திருக் கேதாரமெ னீரே

2-வது பாடல்
பறியேசுமந் துழல்வீர்பறி
நரிகீறுவ தறியீர் குறிகூவிய
கூற்றங்கொளு நாளால்
அறம் உளவே அறிவானிலும்
அறிவான்நல நறுநீரொடு
சோறு கிறிபேசிநின்
றிடுவார்தொழு கேதாரமெ னீரே

வடதிசை கேதாரம்
தளிசாலைகள் தவமாவது தம்மைப்
பெறி லன்றே குளியீருளங் குருக்
கேத்திரங் கோதாவிரி குமரி தெளியீர்
உளஞ் சீபர்ப்பதம்
தெற்குவடக் காகக்
கிளிவாழைஒண் கனிகீறியுண்
கேதாரமெ னீரே
இப்படி ஏராளமான பாடல்கள் கேதாரம், பற்றி பேசுகின்றன. கேதார்நாத் கோயில் தேவாரப் பாடல் கல்வெட்டுகள் இந்த தேவாரப் பாடல் கல்வெட்டுகள் அனைத்துமே கேதார்நாத் கோயிலில் நம்மூர் கல்வெட்டுகளைப் போலவே தமிழில் கல்வெட்டுகளாகவே செதுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. தற்போதைய பெருவெள்ளத்தில் இக்கல்வெட்டுகளின் கதி என்னவானது என்பது தெரியவில்லை.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications