மோடியின் எழுச்சியால் அச்சப்பட்டு கிடக்கிறது காங்கிரஸ்: யஷ்வந்த் சின்ஹா
ஜாம்ஷெட்பூர்: தேசிய அளவில் பிரபலமான தலைவராக குஜராத் முதல்வர் நரேந்திஅ மோடி எழுச்சி பெற்று வருவது காங்கிரஸ் கட்சிக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது அக்கட்சியின் மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா கூறியுள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் பிரசாரக் குழு தலைவராக நரேந்திர மோடி நியமிக்கப்பட்டார். இதையடுத்து பாரதிய ஜனதாவிஉன் பிரதமர் வேட்பாளர் யார் என்று கேள்வி கேட்டு கட்சிக்கு நெருக்கடி அளிக்க முயற்சிகள் நடைபெறுகின்றன. ஆனால் இது பற்றி எந்த முடிவையும் கட்சி எடுக்கவில்லை. இருப்பினும் பாரதிய ஜனதா கட்சியில் பிரச்னை ஏற்படுத்தவே இக்கேள்வி எழுப்பப்படுகிறது.
நாங்களும் கேட்கிறோம்.. காங்கிரஸ் கட்சி சார்பில் பிரதமர் மன்மோகன் சிங்தான் மீண்டும் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படுவாரா? அல்லது ராகுல் காந்தி, ஏ.கே. அந்தோனி, திக்விஜய் சிங் ஆகியோரில் எவராவது பிரதமர் வேட்பாளர் ஆவார்களா?.
குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தேசிய அளவில் பிரபலமான தலைவராக உருவாகி வருகிறார். அதே நேரத்தில் கட்சியின் மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ், ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜேட்லி உள்ளிட்டோரும் பிரதமர் பதவிக்கான வேட்பாளர்கள் பட்டியலில் உள்ளார்கள். ஆனால் கட்சிதான் இறுதி முடிவை எடுக்கும். மோடியின் எழுச்சி காங்கிரஸ் கட்சிக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குடியரசுத் தலைவர் ஆட்சி நடைபெறும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications