காங்கிரஸ் கட்சியின் புலனாய்வு அமைப்புதான் “சிபிஐ”.. பயப்படமாட்டேன்: மோடி!

குஜராத் மாநிலம் இஷ்ரத் ஜஹான் போலி என்கவுன்ட்டர் வழக்கில் அம்மாநிலத்தில் மேலும் பல அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என்று அண்மையில் சிபிஐ தெரிவித்திருந்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் காந்திநகரில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மோடி, சிபிஐ விடுத்துள்ள அச்சுறுத்தலுக்கு குஜராத் அரசு ஒருபோதும் பயப்படாது. மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ இப்போது காங்கிரஸ் புலனாய்வு அமைப்பாக மாறிவிட்டது. குஜராத் மாநிலத்தில் உள்ள அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுக்கு எதிராக புலனாய்வு நடத்தி வழக்குப் பதிவு செய்கிறது சிபிஐ.
ஜனநாயக நாட்டில் புலனாய்வு அமைப்புக்கென்று உள்ள சில வரைமுறைகளை மீறிச் செயல்படுவதால் பொதுமக்கள் மத்தியில் நம்பகத் தன்மையை சிபிஐ முற்றிலுமாக இழந்துவிட்டது. இஷ்ரத் ஜஹான் என்கவுன்ட்டர் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப் போவதாக சிபிஐ கூறியுள்ளது.
சிபிஐ மூலம் அரசியல் ஆதாயம் தேடுகிறது காங்கிரஸ். அப்பாவிகளை அச்சுறுத்த சிபிஐ ஏவப்படுகிறது. குஜராத் மாநிலத்துக்கு களங்கம் கற்பிக்கவே இப்படி செயல்படுகின்றனர். இது நிறுத்தப்பட வேண்டும் என்றார் மோடி.


Click it and Unblock the Notifications
