உத்தர்காண்ட்: மீட்பு பணியில் ஈடுபட்ட ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது- பலி் எண்ணிக்கை 20 ஆனது!

உத்தர்காண்ட் மாநிலத்தில் வெள்ளத்தில் சிக்கியோரை மீட்கும் பணியில் ராணுவம் மட்டுமின்றி, இந்திய விமானப்படையும் ஈடுபட்டுள்ளது. ஆபரேஷன் ரகத் என்று பெயரிடப்பட்டுள்ள மீட்பு பணியில் விமானப்படைக்கு சொந்தமான 45 விமானங்களும் ஹெலிகாப்டர்களும் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன.
இதில் ரஷியாவிடம் இருந்து வாங்கப்பட்ட எம்.ஐ-17 வி5 ரக ஹெலிகாப்டர்களும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளன. நேற்று முன்தினம் மீண்டும் மழை பெய்ததால் விமானப்படை மீட்புப்பணியை நிறுத்தி வைத்திருந்தது. நேற்று வானம் தெளிவாக இருந்ததால் விமானப்படை மீண்டும் மீட்பு பணியை தொடங்கியது. ஆனால் பகலில் வானிலை மோசம் அடைந்தது.
இந்நிலையில் மீட்பு பணியில் ஈடுபட்ட எம்.ஐ-17 வி5 ரக ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்கு உள்ளானது. அந்த ஹெலிகாப்டர் கவுச்சா என்ற இடத்தில் இருந்து குப்த்காசி, கேதார்நாத் ஆகிய இடங்களுக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு வந்தது. 2 முறை பாதுகாப்பாக சென்று விட்டு திரும்பிய அந்த விமானம் 3 வது முறையாக கேதார்நாத் சென்று விட்டு திரும்பும் வழியில் கெளரிகுண்ட் என்ற இடம் அருகே திடீரென விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் முதலில் 8 பேர் பலியானதாக செய்திகள் வெளியாகி இருந்தன. பின்னர் பயணிகள், விமானப் படையினர் மற்றும் துணை ராணுவப் படையினர் உட்பட 20 பேர் பலியாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இச்சம் பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர் இரங்கல்
மீட்புப் பணியில் ஈடுபட்ட ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது பெரும் அதிர்ச்சி அளிப்பதாக பிரதமர் மன்மோகன்சிங் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications