24 மணி நேரத்திற்கு முன் ரயில் டிக்கெட் ரத்து செய்தால் இனி முழு பணம் கிடைக்காது!
டெல்லி: ரயில் பயணத்திற்காக முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளை ரத்து செய்து விட்டு பணத்தை திரும்ப பெறும் முறையில் புதிய விதிமுறைகளை ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. இதன்படி 48 மணி நேரத்துக்கு முன்னதாக ரத்து செய்தால்தான் முழு கட்டணம் கிடைக்கும். இந்த புதிய விதிமுறை ஜூலை 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.
தற்போது ரயில் பயணத்திற்கு முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளை ரயில் புறப்படுவதற்கு 24 மணி நேரம் முன்னதாக ரத்து செய்தால் முழுத் தொகையும் ரயில்வே நிர்வாகம் திருப்பி தரப்படுகிறது. ஆனால் தற்போது அமல்படுத்த உள்ள புதிய விதிமுறையின்படி பயணிகள் தாங்கள் பயணம் செய்வதற்கு 24 மணிநேரத்திற்கு முன் டிக்கெட்டை ரத்து செய்தால் முழு பணம் கிடைக்காது.
இது தொடர்பாக ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

6 மணி நேரத்திற்கு முன்பு
ரயில் புறப்படுவதற்கு 6 மணி நேரம் முன்னதாக டிக்கெட்டை ரத்து செய்தால் 75 சதவீத கட்டணம் திருப்பித் தரப்படும். ரயில் புறப்படுவதற்கு முன் 6 மணி நேரத்திற்குள் அல்லது ரயில் சென்ற 2 மணி நேரத்திற்குள் டிக்கெட்டை ரத்து செய்தால் 50 சதவீதம் கட்டணம் திருப்பித் தரப்படும்.

பயண தூரம் எவ்வளவு?
பயணம் செய்யும் தூரம் 500 கி.மீட்டர் அல்லது அதற்கு மேல் இருக்கும்பட்சத்தில் ரயில் புறப்படும் நேரத்திற்கு 12 மணிநேரத்திற்கு முன் வரை ரத்து செய்யலாம் என்று ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

எதிர்பாராத பயண ரத்து
போராட்டம், இயற்கை சீற்றங்களால் பயணம் ரத்து செய்யப்பட்டால் அல்லது ரத்தாகும் ரயில்களின் கட்டணத்தை திரும்பப் பெறுவதற்கான கால அவகாசம் 90 நாட்களில் இருந்து 10 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.

காத்திருப்போர் பட்டியல்
புதிய மாற்றத்தின்படி காத்திருப்போர் பட்டியலில் இருப்போர் அல்லது ஆர்.ஏ.சி. டிக்கெட்கள் ரயில் புறப்படும் நேரத்திற்கு 3 மணிநேரத்திற்கு முன் ரத்து செய்யப்படும் டிக்கெட்டிற்கு 30 ரூபாய் பிடித்தம் செய்யப்பட்டு கட்டணம் திரும்ப வழங்கப்படுகிறது.
கடந்த 15 வருடங்களாக ரத்து செய்யப்படும் டிக்கெட் மற்றும் கட்டணம் திரும்பப் பெறும் சட்டம் உள்ளிட்ட ரயில் பயணிகள் சட்டம் திருத்தப்படாமல் இருப்பதாகவும், அதனால் டிக்கெட் திட்டத்தில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வர இந்திய ரயில்வே முடிவு செய்திருப்பதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications