ஒகேனக்கல் வந்தது காவிரி நீர்: கபிணி அணையில் இருந்து 25000 கன அடி நீர் திறப்பு…

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், கர்நாடகத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணைகள் நிரம்பும் நிலை ஏற்பட்டுள்ளது.
கபிணி அணை நிறைய இன்னும் 5 அடிகளே பாக்கியுள்ளன. அணைக்கு தற்போது 28,000 கன அடிநீர் வந்து கொண்டிருக்கிறது. இதையடுத்து, கபிணி அணையில் இருந்து 25 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. கிருஷ்ணராஜ சாகர் அணையும் இப்போது வேகமாக நிரம்பி வருகிறது. இப்போது அணையின் கொள்ளளவு 81 அடியாக உள்ளது. இந்த அணை ஜூலை கடைசியில்தான் நிரம்பும் என்று சுறப்படுகிறது.
கபிணி அணையில் இருந்து அதிக அளவு உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருவதால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது.
இதனிடையே தமிழக எல்லையான பிலிகுண்டுவில் மத்திய நீர் ஆணைய உதவிப் பொறியாளர் அலுவலகம் மூலம் காவிரியில் நீர்வரத்து குறித்து அளவீடு செய்யும் பணி நடைபெற்றது. இதில், நீர்வரத்து 3 ஆயிரம் முதல் 3 ஆயிரத்து 500 கனஅடி வரை இருந்ததாக அதன் பணியாளர்கள் தெரிவித்தனர்.
தற்போது மேட்டூர் அணையின் நீர் இருப்பு மூன்று டி.எம்.சி அளவிற்கு குறைந்துள்ளது. எனினும், கர்நாடக அணைகளில் இருந்து அதிக அளவு உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருவதால் மேட்டூர் அணையின் நீர் இருப்பு விரைவில் அதிகரிக்க வாய்ப்புள்ளது. தற்போது மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 900 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications