காப்பி போடுற மாதிரி... வீட்டில் சாராயம் காய்ச்சிய கணவன், மனைவி கைது
மேச்சேரி: மேச்சேரியில் வீட்டில் ரகசியமாக சாராயம் காய்ச்சிய கணவன், மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர்.
வீட்டில் சமையல் செய்வது போல் பாவனையில் சாராயம் காய்ச்சியுள்ளனர் மேச்சேரியைச் கொசவன் கிணறு என்ற பகுதியைச் சேர்ந்த விசுவநாதன். அக்கம் பக்கத்தினர் அளித்த ரகசியத்தகவலின் பேரில், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு (பயிற்சி) முரளி, மற்றும் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார், எஸ்.ஐ.க்கள் ராதாகிருஷ்ணன், வேணுகோபால், சுப்ரமணியம் மற்றும் ஏட்டுகள் திடீரென அந்த பகுதியில் சோதனை நடத்தினர்.
அப்போது விசுவநாதன் வீட்டில், 3 மற்றும் 20 லிட்டர் கேன்களில் சாராயம் ஊறல் போடப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் 4 லிட்டர் சாராயமும் இருந்ததும் தெரிய வந்தது. சாராயம் காய்ச்சுவது உதுதி செய்யப்பட்டதை அடுத்து, போலீசார் விசுவநாதன் மற்றும் அவரது மனைவி கிருஷ்ணவேணியை கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து விசுவநாதன் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது, ‘கடந்த 6 மாதமாக நாங்கள் வீட்டில் வைத்து சாராயம் காய்ச்சி அதை அருகில் உள்ள செங்கல் சூளையில் வேலைப்பார்க்கும் தெரிந்த நபர்களுக்கு மட்டும் விற்பனை செய்து வந்தோம். மேலும் ஸ்டவ் அடுப்பு, விறகு அடுப்பில் வீட்டிலேயே சாராயம் காய்ச்சினோம்.
செல்போன் மூலம் அழைத்து சப்ளை செய்து வந்தோம். தெரிந்த நபர்களுக்கு மட்டும் தான் விற்பனை செய்தோம். தெரியாதவர்களுக்கு விற்பனை செய்யமாட்டோம்' எனத் தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications