உத்தரகண்ட் வெள்ளம்: இந்த ஹீரோக்களுக்கு 'சல்யூட்' அடிங்க!
டேராடூன்: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உத்தரகண்ட் மாநிலத்தில் இரவு பகல் பாராது மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவத்தினருக்கு பாராட்டுகள் வந்து குவிகிறது.
உத்தரகண்ட் மாநிலத்தில் கடந்த வாரம் பெய்த கன மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும் பல்வேறு இடங்களில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டது. இதில் சிக்கி 800க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
பல்வேறு பகுதிகளில் சிக்கித் தவிப்பவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில் இரவு பகல் பாராது மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவத்தினருக்கு பாராட்டுகள் வந்து குவிகிறது.

நிவாரண நிதி
கேதர்நாத்தில் மீட்கப்பட்ட யாத்ரீகர்களுக்கு மாநில அரசு நிதியுதவி செய்கிறது.

ஹைதராபாத்
உத்தரகண்ட் வெள்ளத்தில் இருந்து மீட்கப்பட்ட ஆந்திர மக்கள் ஹைதராபாத் விமான நிலையத்தில் வந்திறங்கினர்.

காயத்திற்கு மருந்து
உத்தரகாசியில் காயமடைந்த பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

காணவில்லை
வெள்ளம் பாதித்த பகுதிகளில் காணாமல் போனவர்களின் புகைப்படங்கள் விமான நிலைய வாயிலில் உள்ள அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டது.

சிறுவன் மீட்பு
லம்பாகரில் சிக்கிய சிறுவனை மீட்டுச் செல்லும் ராணுவ வீரர்.

இரும்பு பாலம்
யாத்ரீகர்களை மீட்க லம்பாகரில் இரும்பு பாலம் கட்டும் ராணுவ வீரர்கள்.

யாத்ரீகர்கள்
உத்தரகண்டில் யாத்ரீகர்களை மீட்ட ராணுவ வீரர்கள்.

உணவு வழங்கல்
மீட்கப்பட்ட யாத்ரீகர்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கும் ராணுவ வீரர்.

ராணுவ மருத்துவர்கள்
உடல் நிலை மிகவும் மோசமான மூதாட்டிக்கு சிகிச்சை அளிக்கும் ராணுவ மருத்துவர்கள்.

ஆற்றுக்குள் விழுந்த லாரி
கேஸ் சிலிண்டர்களை ஏற்றிச் சென்ற லாரி ஒன்று உத்தரகாசியில் பகிரதி ஆற்றுக்குள் விழுந்தது.

இறுதிச் சடங்கு
ஹரித்வாரில் உத்தரகண்ட் வெள்ளத்தில் இறந்தவர்களின் உடல்கள் எரிக்கையில் மரியாதை செய்யும் போலீசார்.

ஹெலிகாப்டருக்காக காத்திருப்பு
மீட்கப்பட்ட யாத்ரீகர்கள் ராணுவ ஹெலிகாப்டருக்காக கௌசாரில் காத்திருந்தனர்.

காயம் அடைந்தவர்
காயம் அடைந்த யாத்ரீகர் ஒருவரை ஸ்ட்ரெச்சரில் தூக்கிச் செல்லும் ராணுவ வீரர்கள்.

சூரத்
உத்தரகண்டில் இருந்து பத்திரமாக சூரத் திரும்பிய யாத்ரீகர்கள் உறவினர்களைப் பார்த்து கண்ணீர் விடுகின்றனர்.

கயிற்று பாலம்
லம்பாகரில் அலக்நந்தா ஆற்றின் குறுக்கே கயிற்று பாலம் கட்டி மீட்பு பணி நடந்தது.

ஏணி
உத்தரகாசியில் கயிறு மற்றும் ஏணியை பயன்படுத்தி யாத்ரீகர்கள் மீட்கப்பட்டனர்.

சாதுக்கள்
கேதர்நாத் கோவில் அருகே விமானப்படை ஹெலிகாப்டருக்காக காத்திருந்த சாதுக்கள்.

கேதர்நாத் கோவில்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேதர்நாத் கோவில் மற்றும் அதன் அருகில் உள்ள கட்டிடங்கள்.

பகிரதி ஆறு
வெள்ளப்பெருக்கு எடுத்துள்ள பகிரதி ஆற்றங்கரையில் வழிபடும் நபர்.

மும்பை
உத்தரகண்டில் இருந்து மீட்கப்பட்ட பெண் யாத்ரீகர்கள் மும்பை மத்திய ரயில் நிலையத்தை அடைந்தனர்.

சேதமடைந்த வீடுகள்
உத்தரகண்டின் ஸ்ரீநகரில் வெள்ளத்தால் சேதமடைந்த வீடுகள்.

ஜோத்பூர்
உத்தரகண்டில் சிக்கி மறுபிறவி எடுத்து வந்த ஜோத்பூர் யாத்ரீகர்கள்.

சாலை சீரமைப்பு
கௌசாரில் சேதமடைந்த சாலையை சீரமைக்கும் அதிகாரிகள்.

தற்காலிக பாலம்
அலக்நந்தா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட தற்காலிக பாலம்.

வலியால் அழும் முதியவர்
குப்த் காசியில் காயமடைந்த யாத்ரீகருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

கோவிந்தகாட்
கோவிந்த்காட்டில் சிக்கித் தவித்த யாத்ரீகர்களை மீட்கும் ராணுவத்தினர்.

கயிறு மூலம் ஆற்றை கடத்தல்
கோவிந்த்காட்டில் கயிறு மூலம் ஆற்றை கடக்கும் நபர்.

கௌசார்
கௌசாரில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட சாலையை சரி செய்யும் மக்கள்.

நிவாரண பொருட்கள்
கேதர்நாத் அருகே ஹெலிகாப்டரில் இருந்து நிவாரண பொருட்களை இறக்கும் ராணுவத்தினர்.

மறுபிறவி எடுத்திருக்கிறேன்
டேராடூனில் மீட்கப்பட்ட முதியவர் ஒருவர் வெள்ளத்தில் சிக்கிப் பிழைத்ததை நினைத்து அழுகிறார்.












Click it and Unblock the Notifications