காஷ்மீரில் வீரமரணம் அடைந்த வீரரின் மனைவி தீக்குளித்து தற்கொலை
கொல்கத்தா: காஷ்மீரில் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட ராணுவ வீரரின் மனைவி, மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார்.
கடந்த இரு தினங்களுக்கு முன் ஸ்ரீநகர் அருகே நடந்த தீவிரவாத தாக்குதலில் எட்டு ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயம் அடைந்தனர்.
வீரமரணம் எய்திய அவ்வீரர்களின் குடும்பத்திற்கு மாநில அரசு நிவாரணத் தொகை அளித்த போதும், அவர்களின் குடும்பத்தினர் இன்னும் சோகத்திலிருந்து மீளவில்லை. அதன் எதிரொலியாக வீரமரணம் அடைந்த வீரரின் மனைவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேற்கு வங்க மாநிலம் பங்குரா மாவட்டத்தைச் சேர்ந்த இளம் வீரரான ஆதித்யா நந்தியும் தீவிரவாத தாக்குதலில் பலியானவர்களில் ஒருவர். பணியை முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்த வேளையில் இந்த அசம்பாவித சம்பவம் நடந்துள்ளது. தாக்குதல் செய்தி கேட்டதும் ஆதித்யாவின் மனைவி பினு நந்தி அதிர்ச்சி அடைந்துள்ளார்.
கணவரின் திடீர் பிரிவை தாங்கிக் கொள்ள முடியாத பினு தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாராம். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பினுவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
வீரமரணம் அடைந்த வீரரின் மனைவி தற்கொலை செய்து கொண்டதால் அப்பகுதியில் சோகம் நிலவுகிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications