உத்தரகண்ட் விபத்தில் பலியான விமானி பிரவீண் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம்: ஜெ. உத்தரவு

உத்தர்கண்ட் மாநிலம் கௌரிகுண்ட் பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய பக்தர்களை மீட்க முயன்ற போது ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த ஹெலிகாப்டரை இயக்கியவர் மதுரையைச் சேர்ந்த பைலட் பிரவீண் என்பது தெரியதது.
மதுரையைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி - மஞ்சுளா தம்பதியின் மகன் பிரவீண். இவருக்கு 27 வயதாகிறது. கடந்த 2007ம் ஆண்டு பி.இ முடித்த பிரவீண், 2009ம் ஆண்டு விமானப் படையில் சேர்ந்து பிளைட் லெப்டினண்ட் பதவி வரை உயர்ந்தார் கே.பிரவீண்.
இரு தினங்களுக்கு முன்னர்தான் மீட்புப் பணிக்காக டேராடூனில் சென்றுக்கிறார் பிரவீண். புறப்படும் முன்னர் தாயாரிடம் தொலைபேசியில் பேசும் போது, 'மீட்பு பணிக்காக செல்கிறேன். மீட்பு பணி முடிந்த பின்னர் பேசுவதாகக்' கூறியுள்ளார். இந்நிலையில் விபத்து ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
பிரவீண் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ஜெயலலிதா, முதல்வர் நிவாரண நிதியில் இருந்து ரூ. 10 லட்சம் ரூபாய் பிரவீண் குடும்பத்திற்கு வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications
