திமுக விரட்டினாலும் கூட்டணியை விட்டு போகமாட்டோம்: திருமாவளவன்
எங்களை கூட்டணியில் இருந்து வெளியே போகச்சொல்லி திமுக சொன்னால் கூட நாங்கள் கவலைப்பட மாட்டோம் திமுகவுடன் தான் இருப்போம். ஏனெனில் தேர்தலுக்குத் தேர்தல் அணி மாறுவது நாங்கள் அல்ல என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
தேனி அருகே கம்பம் நகரில் நடந்த திருமண வரவேற்பு விழாவில் பங்கேற்ற திருமாவளவன் பேசியதாவது:
ஈழத்தமிழர்களுக்காகவும், முல்லை பெரியாறு பிரச்சினைக்காகவும், சிறுபான்மை சமுதாய மக்களுக்காகவும் எங்கள் கட்சி போராடி வருகிறது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியை யாரும் அசைக்கமுடியாது. தேர்தலுக்கு தேர்தல் அணி மாறுவது நான் இல்லை. நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே எங்களை திமுக அணியில் இருந்து பிரிக்க நினைக்கின்றனர். எந்த அணியில் சேர்ந்து எம்.பி.யாக ஆனேனோ அந்த நன்றியை மறக்க மாட்டேன். தி.மு.க.வே எங்ளோடு கூட்டு வேண்டாம் என்று கூறினால் கூட அதைப்பற்றி நாங்கள் கவலை படமாட்டோம். என்றும் நாங்கள் தி.மு.க.வுடன்தான் இருப்போம்.
நரேந்திர மோடி பிரதமர் ஆனால் முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு இருக்காது. நரேந்திரமோடியை முஸ்லிம்கள் ஏற்றுக்கொண்டால் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். நடை பெற உள்ள டெல்லி மேல்-சபை தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெற கனிமொழி வெற்றி பெற வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.
-
“திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம்.. தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு”.. CPI வீரபாண்டியன் உறுதி! -
ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்த கருணாநிதி! திநகர் மாஜி எம்எல்ஏவை தட்டி தூக்கிய தவெக! -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
உதயநிதியின் தவறுக்கான தண்டனைதான்.. திமுகவின் தோல்வி! ராகுல் காந்தியை இழுக்காதீங்க - மாணிக்கம் தாகூர் -
“தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளார் ராகுல்..” முரசொலி சரமாரி விமர்சனம்! -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம்












Click it and Unblock the Notifications