சமையல் செய்ய மறுத்த 2வது மனைவியை கொன்ற ஆட்டோ டிரைவர்: போலீசில் சரண்
பெங்களூர்: சமையல் செய்ய மறுத்து செலவுக்கு பணாம் கேட்ட இரண்டாவது மனைவியை, கோபத்தில் கழுத்தை நெரித்துக் கொன்ற ஆட்டோ டிரைவர் போலீசில் சரணடைந்தார்.
பெங்களூர் பேட்ராயனபுரா, சாமண்ணா கார்டன் பகுதியில் வசித்து வருபவர் அப்துல் அஜீஸ். இவருக்கு மெகர்தாஜ் என்ற மனைவியும், இரு பெண் குழந்தைகளும் இருந்தனர். சரக்கு ஆட்டோ டிரைவரான அப்துல் அஜீஸ், கடந்த 25-ந் தேதி சிவனசமுத்திரத்தில் உள்ள தர்காவுக்கு குடும்பத்துடன் புறப்பட்டு சென்றார்.
வழிபாடுகளை முடித்து விட்டு நேற்று இரவு வீடு திரும்பிய அப்துல், மனைவியை சமையல் செய்யச் சொல்லி இருக்கிறார். ஆனால் அதனை மறுத்த மெகர், சமைப்பதற்கும், வீட்டு செலவுக்கும் பணம் கொடுக்கும்படி தனது கணவரிடம் கேட்டுள்ளார்.
இதனால், கணவன், மனைவி இடையே கடும் வாக்குவாதம் உருவாகியுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில், கோபத்தில் அப்துல், அருகில் கிடந்த நைலான் கயிறால் மெகரின் கழுத்தை நெரித்துள்ளார். இதில், மெகர் மூச்சு திணறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
பின்னர் தனது மனைவியை தானே கொலை செய்து விட்டதாகக் கூறி பேட்ராயனபுரா போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார் அப்துல். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அங்கிருந்த மெகரின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக விக்டோரியா ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அப்துல் மற்றும் மெகர் இருவருமே ஏற்கனவே திருமணமானவர்கள் என்பதும், ஐந்தாண்டுகளுக்கு ம் முன்னர் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட இத்தம்பதியினருக்கு, திருமணமான நாள் முதற்கொண்டு சண்டை நடந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளதாக போலீசார் கூறியுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications