ஓட்டுச்சீட்டை எல்லோருக்கும் காட்டிய தேமுதிக எம்எல்ஏ ஓட்டு செல்லுமா?: தேர்தல் கமிஷன் விசாரணை
டெல்லி: ராஜ்யசபா தேர்தலில் வாக்களித்த தேமுதிக எம்எல்ஏ தனது ஓட்டுச் சீட்டை அனைவருக்கும் தெரியும்படி காட்டியதால் அவரது வாக்கு செல்லுமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
தமிழகத்தில் இருந்து 6 ராஜ்யசபா எம்பிக்களைத் தேர்வு செய்ய நேற்று தேர்தல் நடந்தது.
எம்.எல்.ஏக்கள் ஓட்டுப்போடும் முன் யாருக்கு போடுகிறோம் என்பதை தனது கட்சியின் ஏஜெண்டிடம் மட்டும் காண்பிக்க வேண்டும்.
ஆனால், திருத்தணி தொகுதி தே.மு.தி.க. எம்.எல்.ஏ அருண் சுப்பிரமணியன் தனது ஓட்டுச்சீட்டை தே.மு.தி.க. தேர்தல் ஏஜெண்டிடம் அருகில் போய் காட்டாமல் தூரத்தில் நின்று எல்லோருக்கும் தெரியும்படி காட்டினார்.
இதையடுத்து தேர்தல் அதிகாரி ஜமாலுதீன், ஓட்டுச்சீட்டை எல்லோரிடமும் காண்பிக்க கூடாது. ஏஜெண்டிடம் அருகில் சென்று தான் காட்ட வேண்டும், எல்லோருக்கும் தெரியும்படி காட்டினால் ஓட்டை ரத்து செய்ய நேரிடும் என்று எச்சரித்தார்.
இதைத் தொடர்ந்து அருண் சுப்பிரமணியம் தனது கட்சி ஏஜெண்டிடம் நெருங்கிச் சென்று காட்டிவிட்டு ஓட்டுப்போட்டார்.
இந் நிலையில் இந்த விவகாரம் குறித்து ராஜ்யசபா தேர்தல் பார்வையாளரிடம் இருந்தும் தேர்தல் அதிகாரியிடம் இருந்தும் அறிக்கை வந்ததும் அதன் மீது ஆய்வு செய்து தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதனால் அவரது ஓட்டு செல்லாது என அறிவிக்கப்படும் அபாயமும் நிலவுகிறது.
ஏற்கனவே 7 அதிருப்தி எம்எல்ஏக்கள் அதிமுகவுக்கு ஓட்டுபோட்டுவிட்ட நிலையில், தேமுதிகவில் நீடிக்கும் ஒரு எம்எல்ஏவின் ஓட்டும் கேள்விக்குறியாகியுள்ளது.
தேமுதிக வேட்பாளர் இளங்கோவன் அதிக வாக்கு வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் கனிமொழியிடம் தோற்றுவிட்ட நிலையில், இந்த ஓட்டு செல்லாத ஓட்டு ஆனாலும் கூட தேர்தல் முடிவில் எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications