அமெரிக்க சிறுமி பாலியல் வழக்கு: ஊட்டி பாதிரியாரை கைது செய்தது சரியே- ஹைகோர்ட்
சென்னை: அமெரிக்காவில் பாதிரியாராக இருந்த போது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக பதிவான வழக்கில், ஊட்டி பாதிரியாரை டெல்லி போலீசார் கைது செய்தது சட்டவிரோதம் இல்லை என உத்தரவிட்டுள்ளது சென்னை ஹைகோர்ட்.
ஊட்டியை சேர்ந்தவரான பாதிரியார் ஜோசப் பழனிவேல் ஜெயபால், அமெரிக்காவில் உள்ள தேவாலயத்தில், 2004-ம் ஆண்டு முதல் 2005-ம் ஆண்டு வரை பாதிரியாராக பணியாற்றினார். அப்போது, அங்கு ஜெயபால் 14 வயது சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டார். ஜெயபால் மீது அமெரிக்கா போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.
ஜாமீனில் வெளிவந்த ஜெயபால், தந்தைக்கு உடல் நலம் சரியில்லை எனக் கூறி 2005-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்தியா வந்தார். ஆனால், மீண்டும் அமெரிக்கா திரும்பிச் செல்லவில்லை. இதனால், ஜெயபாலை பிடித்து தங்களிடம் ஒப்படைக்கும் படி அமெரிக்க போலீஸ் சார்பில் அமெரிக்கத் தூதரகம் இந்திய வெளியுறவுத் துறைக்கு கடிதம் வாயிலாக வேண்டுகோள் விடுத்தது.
இந்த வழக்கின் உண்மை நிலையை ஆராயும் படி டெல்லி மாநகர தலைமை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டுக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் மேற் கொள்ளப்பட்ட விசாரணையில், ஜெயபாலை கைது செய்ய உத்தரவிட்டார் டெல்லி தலைமை மாஜிஸ்திரேட்டு.
கோர்ட்டு உத்தரவின் பேரில் கைதான ஜெயபாலின் கைது நடவடிக்கை சட்ட விரோதமானது என சென்னை ஐகோர்ட்டில் ஜோசப் பழனிவேல் ஜெயபாலின் சகோதரி புஷ்பாவதி ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார்.
புஷ்பவதி தாக்கல் செய்த மனுவில், ‘2012-ம் ஆண்டு மார்ச் 16-ந் தேதி என் சகோதரரை கைது செய்த டெல்லி போலீசார் 19-ந் தேதிதான் கோர்ட்டில் ஆஜர்படுத்தியுள்ளனர். கைது செய்யப்பட்டவர் 24 மணி நேரத்துக்குள் கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்று டி.கே.பாசு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. ஆனால், 24 மணி நேரத்துக்குள் கோர்ட்டில் ஆஜர்படுத்தாததால், என் சகோதரரின் கைதும், இப்போது ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளதும் சட்டவிரோதமாகும். எனவே அவரை இந்த கோர்ட்டில் ஆஜர்படுத்தி விடுவிக்கவேண்டும்‘ எனக் தெரிவித்திருந்தார்.
புஷ்பவதியின் மனுவை விசாரித்த நீதிபதிகள் தனபாலன், சி.டி. செல்வம் ஆகியோர் பிறப்பித்துள்ள உத்தரவில் பின்வருமாறு தெரிவித்துள்ளதாவது, ‘ கிரிமினல் வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஜோசப் பழனிவேல் ஜெயபாலை அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்க முகாந்திரம் உள்ளதா என்பது குறித்து டெல்லி கோர்ட்டு விசாரிக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன் அடிப்படையில், ஜோசப் பழனிவேல் ஜெயபாலுக்கு எதிராக பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டு, கைது செய்யப்பட்டு, திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். எனவே மனுதாரரின் சகோதரருக்கு எதிராக டெல்லி கோர்ட்டு பிறப்பித்துள்ள பிடிவாரண்ட், அதன் தொடர்ச்சியாக அவரை கைது செய்த நடவடிக்கை ஆகியவை சட்டவிரோதம் கிடையாது என்று முடிவு செய்கிறோம். இந்த மனுவை தள்ளுபடி செய்கிறோம்' என இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications