தமிழகம் முழுவதும் மழைக்காக கோயில்களில் சிறப்பு யாகம் நடத்தும் ஜெயலலிதா அரசு!
சென்னை: தமிழகத்தில் மழை பெய்து மாநிலம் செழிக்க வேண்டி மாநிலம் முழுவதும் உள்ள முக்கிய கோவில்களில் யாகம் நடத்தி வருகிறது தமிழக அரசு.
தமிழகத்தில் பருவ மழை பொய்த்ததால் ஏரி, குளங்களில் தண்ணீர் இல்லை. நிலத்தடி நீர் மட்டமும் வெகுவாக குறைந்து விட்டது. இதனால் மாநிலம் முழுவதும் கடுமையான வறட்சி மற்றும் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் யாகங்கள்...
இதையடுத்து முக்கிய கோவில்களில் யாகம் நடத்த உத்தரவிட்டுள்ளது தமிழக அரசு. இதைத் தொடர்ந்து இந்து அறநிலையத்துறை சார்பில் மாநிலம் முழுவதும் கோவில்களில் யாகங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதில் ஓதுவார்களை கொண்டு சுந்தரமூர்த்தி நாயனார் இயற்றிய 7ம் திருமறை பதிகம் ஓதுதல், மேகவர்சினி, அமிர்தவர்சினி, ஆனந்த பைரவி, ரூபகல்யாணி போன்ற ராகங்களுடன் வாத்தியங்கள் இசைக்க வேண்டும், சிவன் கோயில்களில் சிவபெருமானுக்கு சீதலகும்பம் எனப்படும் தாராபாத்திரத்தில் நீர்விழச் செய்தல் போன்றவை நடத்திட வேண்டும், ருத்ர அபிஷேகம், வர்ண வேத மந்திர பாராயணம், காயத்ரி மந்திர பாராயணம் உள்ளிட்டவை நடத்தப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னையில்...
இந்த யாகங்கள் கடந்த 20ம் தேதி முதல் நடந்து வருகின்றன. சென்னையில் மட்டும் 28 கோயில்களில் யாகம் நடக்கிறது. மயிலை மாதவப்பெருமாள் கோயில், பாடி திருவல்லீஸ்வரர் கோயில், அரண்மனைக்காரன் தெரு கச்சாலீஸ்வரர் கோயில், கோயம்பேடு குறுங்காலீஸ்வரர் கோயில் ஆகிய கோயில்களில் சிறப்பு யாகங்களும் வருண பூஜைகளும் நடத்தப்பட்டன.
யாகத்தில் நவதானியங்கள், வஸ்திரங்கள் போடப்பட்டு மகா யாகமும், தீபாராதனையும் காட்டப்பட்டது.

தஞ்சை பெரிய கோவிலில்...
இதே போல தஞ்சை பெரிய கோவிலிலும் சிறப்பு யாகம் நடத்தியது இந்து சமய அறநிலையத்துறை. விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கிய யாகத்தில் சங்கல்பம் புண்யாகம், வேதிகார்ச்சனை, பர்ஜன்யசாந்தி யாகம், வருணசூக்த ஜபபாராயணம், வருண காயத்ரி ஜபபாராயணம், ருத்ரபாராயணம், வருணமாலா மந்திரஜபம் ஆகியவை நடைபெற்றது.
இதையொட்டி ரோஜா, தாமரை, முல்லை, பிச்சிப்பூக்களால் யாகக் குண்டங்கள் அலங்கரிக்கப்பட்டிருந்தன.

வாழைப்பழம், ஆப்பிள், ஆரஞ்சு, அண்ணாச்சி, கொய்யா, மாதுளை...
வாழைப்பழம், ஆப்பிள், ஆரஞ்சு, அண்ணாச்சி, கொய்யா, மாதுளை போன்ற பழ வகைகளும் யாகக் குண்டங்களின் முன் வைக்கப்பட்டிருந்தன. முந்திரி, சர்க்கரை, மிளகு, கடுகு உள்பட 91 வகையான பொருட்கள் யாகக் குண்டத்தில் போட்டு பூஜை செய்யப்பட்டது.
ஓதுவா மூர்த்திகளால் மழைக்குரிய திருப்புங்கூர் மற்றும் திருஞானசம்பந்தர், சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாடிய பதிகங்கள் பாடப்பட்டன. தொடர்ந்து நாதஸ்வரவித்வான்கள் ஆனந்த பைரவி, அமிர்தவர்ஷினி போன்ற ராகங்களை வாசித்தனர்.
பின்பு பெருவுடையாருக்கு யாகத்தில் வைக்கப்பட்டிருந்த தீர்த்தம் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூரில்..
அதே போல ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீவடபத்ர சயனர் திருக்கோயிலில் மழை வேண்டி வருண யாகம் நடைபெற்றது.
பெரிய பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து வருண யாகம் நடைபெற்றது.

குற்றாலநாதர் கோயிலில்...
குற்றாலம் குற்றாலநாதர் கோயிலில் நேற்று மழை வேண்டி யாகம் நடந்தது.குற்றாலநாதர் குழல்வாய்மொழி அம்பாள் கோயிலில் காலை 9 மணி முதல் யாகம் நடந்தது.

திருத்தணி முருகன் கோயிலில்.... அரியலூர் பெருமாள் கோயிலில்...
அதே போல திருத்தணி முருகன் கோயிலிலும் பருவமழை வேண்டி சிறப்பு யாகப் பூஜைகள் நடைபெற்றன.
மேலும் அரியலூர் பெருமாள் கோயிலிலும் வருண யாகம் நடந்தது. கோவில் வளாகத்தில் உள்ள நரசிம்ம மூர்த்திக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது.

ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில்...
ஆனைமலை மாசாணியம்மன் கோவிலிலும் மழை மற்றும் விவசாய வளம் பெற சிறப்பு யாகம் நடைபெற்றது. அர்ச்சகர்கள் மற்றும் ஓதுவார்கள் மழை பெய்ய வேண்டி சுந்தரமூர்த்தி சுவாமிகளின் 7-ம் திருமுறை மற்றும் திருஞானசம்பந்தரின் 12-ம் திருமுறை ஆகிய மழை பாசுவங்களை பாடினர்.
மழைக்கான நாமங்களான அமிர்தவர்ஷினி மேகவர்ஷினி கேழாரி, ஆனந்த பைரவி, வருண காயத்திரி மந்திரம், ரூபகல்யாணி ராகங்களும் இசைக்கப்பட்டன.
-
பேய் மழை வெளுத்து வாங்க போகுது.. தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இன்று டமால் டுமீல் தான்! மெட் அப்டேட்! -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் மழை! வானிலை மையம் வார்னிங்! -
பிச்சு உதற போகுது கனமழை.. 7 மாவட்டங்களில் டமால் டுமீல் தான்! வங்கக்கடல் சக்கரத்தால் இனி கூலிங் தான்! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
அஷ்டமத்து சனி ஓவர்! இனிதான் விஜய் ஆட்டம் ஆரம்பம்! ஆட்சியை இழக்கவும் தயங்க மாட்டார்! ஷெல்வி கணிப்பு -
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்!












Click it and Unblock the Notifications