சென்னையை குளிர்வித்த திடீர் மழை… வடமாவட்டங்களில் இன்றும் மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் கடந்த 1ம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை சில மாவட்டங்களில் பெய்துவருகிறது. நெல்லை, குமரி, கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் பெய்து வரும் மழையால் நீர் நிலைகள் நிரம்பியுள்ளன.
நேற்று காலை 8-30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேர நிலவரப்படி சின்னக்கல்லார் 6 செ.மீ., சேலம் 5 செ.மீ., தேவலா, வால்பாறை, கோபிச்செட்டிப்பாளையம், ஆத்தூர் தலா 4 செ.மீ., பொள்ளாச்சி, மங்களபுரம், ஆர்.எஸ்.மங்கலம், பெரியார் தலா 3 செ.மீ., செங்கோட்டை, ஓமலூர், குமரப்பாளையம், பவானி, அஞ்சட்டி தலா 2 செ.மீ., திருப்பத்தூர், சங்ககிரி, வாழப்பாடி தலா 1 செ.மீ.மழை பதிவாகி உள்ளது.
சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களில் மழை ஏமாற்றி வந்தது. கடந்த சிலநாட்களாக பகலிலும், இரவிலும் வெப்பத்தில் சிக்கித் தவித்த சென்னை மக்களை குளிர்விக்கும் விதமாக நேற்று மாலையில் திடீர் என்று மேகம் திரண்டு மழைபெய்தது.
எழும்பூர், மயிலாப்பூர், வேப்பேரி, புரசைவாக்கம், அடையாறு, வில்லிவாக்கம், கொரட்டூர், தாம்பரம், ராஜகீழ்பாக்கம், மாடம்பாக்கம் உள்பட பல்வேறு இடங்களில் நேற்று மாலை மழை பெய்தது. இதனால் இரவில் வெப்பம் தணிந்து குளிர்காற்று வீசியது.
இன்றும் மழை
இன்று தமிழ்நாட்டின் வடமாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்யும் என்றும் மற்ற மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை கர்நாடகத்தில் தீவிரம்அடைந்துள்ளது. இருப்பினும் கேளரா, ஆந்திரா ஆகிய மாநிலங்களிலும் பெரும்பாலான இடங்களில் மழை பெய்துவருகிறது குறிப்பிடத்தக்கது.
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications