வெளிநாட்டு ஊடகங்கள் கழுகுகள் போன்றவை: மண்டேலாவின் மூத்த மகள் சாடல்

Subscribe to Oneindia Tamil

Foreign media are 'vultures': Mandela's eldest daughter
ஜொஹன்னஸ்பர்க்: வெளிநாட்டு ஊடகங்கள் கழுகுகள் போன்றவை என்று தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவின் மூத்த மகள் குற்றம் சாட்டியுள்ளார்.

தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா நுரையீரல் கோளாறு காரணமாக ப்ரிடோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த மாத துவக்கத்தில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவரின் நிலைமை தொடர்ந்து கவலைக்கிடமாகவே உள்ளது. இந்நிலையில் செய்தி சேகரிக்க மருத்துவமனைக்கு வெளியே வெளிநாட்டு ஊடகங்கள் காத்திருக்கின்றன.

ஊடகங்களின் இந்த செயல் மண்டேலாவின் மூத்த மகள் மகாசிவேவை எரிச்சலடைய வைத்துள்ளது.

இது குறித்து அவர் கூறுகையில்,

வெளிநாட்டு ஊடகங்கள் ஆப்பிரிக்க வழக்கங்கள் மற்றும் குடும்ப உணர்வுகளை மதிக்கத் தவறிவிட்டன. ஒரு சிங்கம் எருமைமாட்டை அடித்துக் கொன்றவுடன் அது சாப்பிட்டுவிட்டு போடும் மீத துண்டுகளுக்காக காத்திருக்கும் கழுகுகளைப் போன்று உள்ளது வெளிநாட்டு ஊடகங்களின் செயல். எனது தந்தை உலக பிரபலமானவர் மற்றும் 20ம் நூற்றாண்டின் அதிகாரமிக்க 25 பேர்களில் ஒருவர் என்பதற்காக மக்கள் அவரின் தனிமை மற்றும் கௌரவத்தை மதிக்க வேண்டிய தேவையில்லை என்று அர்த்தம் இல்லை.

எல்லை தாண்டி வந்துள்ள வெளிநாட்டு ஊடகங்களின் செயலில் இனவாதம் உள்ளது. மருத்துவமனைக்குள் நுழையவும் முடியவில்லை, வெளியே செல்லவும் முடியவில்லை. இந்த ஊடகங்களால் அவ்வளவு தொல்லையாக உள்ளது என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+