மதுரை வந்தது விமானி பிரவீண் உடல்... அரசு மரியாதையுடன் தகனம்

உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று கடந்த 25ஆம் தேதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 20 பேர் பலியானார்கள். அதில் மதுரையைச் சேர்ந்த இளம் விமானி பிரவீணும் மரணம் அடைந்தார். அவரது உடல் இன்று (29.06.13) காலை விமானப்படைக்கு சொந்தமான சிறப்பு விமானம் மூலம் மதுரை கொண்டு வரப்பட்டது.
அவரது உடலைப் பார்த்து தாய் மஞ்சுளா மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். பின்னர் சத்தியசாய் நகரில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டது.
மதுரை கலெக்டர் அன்சுல் மிஸ்ரா, போலீஸ் கமிஷனர் சஞ்சய் மாத்தூர், மேயர் ராஜன்செல்லப்பா, எம்.எல்.ஏ.க்கள் அண்ணாத்துரை, கதிரவன் உள்பட முக்கிய பிரமுகர்கள் பலர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
பிரவீண் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய அமைச்சர் செல்லூர் ராஜு, முதல் அமைச்சர் ஜெயலலிதா அனுப்பிய இரங்கல் செய்தியையும், முதல்வர் சார்பில் ரூ .10 லட்சத்திற்கான காசோலையையும் வழங்கினார்.
பொதுமக்கள், பள்ளி மாணவர்கள், சீருடைப்பணியாளர்கள், சமூக சேவர்கள் என பலரும் அவருக்கு வீர வணக்கம் செலுத்தி இறுதி ஊர்வலத்திலும் கலந்து கொண்டனர். இறுதியாக அரசு மரியாதையுடன் பிரவீணின் உடல் அனுப்பானடி மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications