சோனியா- மன்மோகன் சிங்குடன் கனிமொழி சந்தித்து: ஆதரவுக்கு நன்றி தெரிவித்தார்!

வெறும் 23 எம்எல்ஏக்களை மட்டுமே கொண்ட திமுக காங்கிரஸ், மனிதநேய மக்கள் கட்சி, புதிய தமிழகம் ஆதரவுடன் தான் இந்தத் தேர்தலில் வென்றது.
காங்கிரஸ் ஆதரவு திமுகவுக்கா அல்லது தேமுதிக வேட்பாளருக்கா என்பதில் கடைசி வரை இழுபறி நிலவி வந்தது.
தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களான ப.சிதம்பரம், ஜி.கே.வாசன் ஆகியோர் தேமுதிகவை ஆதரிக்கலாம் என்று சோனியாவுக்கு யோசனை சொன்னதாகக் கூறப்படும் நிலையில், அதையும் மீறி கனிமொழிக்கு ஆதரவு தந்து வெற்றி பெறச் செய்தார் சோனியா.
பெரும் இழுத்தடிப்புக்குப் பின்னரே இந்த ஆதரவு கிடைத்தது.
இந் நிலையில் திமுக எம்பி டி.ஆர்.பாலுவுடன் டெல்லி சென்ற கனிமொழி சோனியாவை சந்தித்து நன்றி தெரிவித்துக் கொண்டார். கனிமொழியின் வெற்றிக்கு காங்கிரஸின் ஆதரவைப் பெறுவதில் மிக முக்கிய பங்கு வகித்தவர் பாலு என்பது குறிப்பிடத்தக்கது.
சந்திப்பின்போது தேர்தலில் வெற்றி பெற்றதற்காக கனிமொழிக்கு சோனியாகாந்தி வாழ்த்து தெரிவித்தார்.
இதையடுத்து பின்னர் பிரதமர் மன்மோகன் சிங்கை அவரது அலுவலகத்துக்கு சென்று கனிமொழி சந்தித்து பொன்னாடை அணிவித்து நன்றி தெரிவித்தார். அவரும் கனிமொழிக்கு வாழ்த்துத் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications
