தேமுதிக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 7 பேர் சஸ்பெண்ட் விஜயகாந்த் உத்தரவு
சென்னை: தேமுதிக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 7 பேரை கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கி கட்சித்தலைவர் விஜயகாந்த் உத்தரவிட்டுள்ளார். அண்மையில் நடைபெற்ற ராஜ்யசபா தேர்தலில், கொறடா உத்தரவை மீறி வாக்களித்தது தொடர்பாக விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.
தே.மு.தி.க.வில் இருந்த 29 எம்.எல்.ஏ.க்களில் மதுரை மத்திய தொகுதி எம்.எல்.ஏ. சுந்தர்ராஜன், பேராவூரணி எம்.எல்.ஏ. அருண்பாண்டியன், திட்டக்குடி எம்.எல்.ஏ. தமிழழகன், ராதாபுரம் எம்.எல்.ஏ. மைக்கேல் ராயப்பன், செங்கம் தொகுதி எம்.எல்.ஏ. சுரேஷ்குமார் ஆகிய 5 பேர் கடந்த 5 மாதத்திற்கு முன்பு கோட்டைக்கு சென்று முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தனர். இவர்களைத் தொடர்ந்து சேர்ந்தமங்கலம் தொகுதி பெண் எம்.எல்.ஏ. சாந்தி ராஜமாணிக்கம், விருதுநகர் தொகுதியின் தேமுதிக எம்.எல்.ஏ மாஃபா பாண்டியராஜன் ஆகியோர் முதல்வரை சந்தித்து மனு கொடுத்தனர்.

தொகுதி வளர்ச்சி தொடர்பாகவே சந்தித்து பேசியதாக அவர்கள் தெரிவித்தனர். அப்போது முதலே இவர்கள் அதிமுகவின் அறிவிக்கப்படாத ஆதரவு எம்.எல்.ஏ.க்களாகவே கருதப்பட்டனர்.
இருப்பினும் அவர்களை கட்சியை விட்டு நீக்காமலேயே வைத்திருந்தார் விஜயகாந்த். ராஜ்யசபா தேர்தலில் தேமுதிகவிற்கு வாக்களிக்க வேண்டும் என்று கட்சி எம்.எல்.ஏக்கள் அனைவருக்கும் தலைவர் விஜயகாந்த் கடிதம் எழுதினார்.
அதனை மதிக்காமல் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 7 பேரும் அதிமுக வேட்பாளர்களுக்கு வாக்களித்தனர். இந்நிலையில் தொகுதி திட்டங்களுக்காகத்தான் தாங்கள் முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்ததாக கூறியவர்களின் உண்மையான நோக்கம் என்ன என்பது, ராஜ்யசபா தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்களித்ததன் மூலம் பட்டவர்த்தனமாக வெளிப்பட்டது.
இதனையடுத்து கட்சி உத்தரவை மீறிய குற்றத்திற்காக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 7 பேரை சஸ்பெண்ட் செய்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் உத்தரவிட்டுள்ளார். விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
-
Hey Everybody! ‘முதல்வன்’ அர்ஜுனான தவெக சமஉக்கள்! கேமராவைக் கண்டு அலறும் ஆபீசர்ஸ்! தவெகவுக்கு தலைவலி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications