ஜூலை 1 முதல் பொதிகை ரயில் நேரம் மாற்றம்…

சென்னை சென்டிரல், எழும்பூரில் இருந்து புறப்படும் ரயில்களின் நேரம் மாற்றம் குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
சென்னை சென்டிரல் ரயில்கள்
மதியம் 1.50 மணிக்கு இயக்கப்பட்ட சென்னை சென்டிரல்-திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயில் இனி பிற்பகல் 2.10 இயக்கப்பட உள்ளது.
பிற்பகல் 2.10 மணிக்கு இயக்கப்பட்ட சென்னை சென்டிரல்-வாஸ்கோடகாமா எக்ஸ்பிரஸ் ரயில் மதியம் 1.50 மணிக்கு இயக்கப்படுகிறது.
பிற்பகல் 2.10 மணிக்கு இயக்கப்பட்ட சென்னை சென்டிரல்- ஹூப்ளி எக்ஸ்பிரஸ் ரயில் மதியம் 1.50 மணிக்கு இயக்கப்பட உள்ளது.
மாலை 4.15 மணிக்கு இயக்கப்பட்ட சென்னை சென்டிரல்- பூரி எக்ஸ்பிரஸ் ரயில் இனி மாலை 4.20 இயக்கப்படுகிறது.
மாலை 4.15 மணிக்கு இயக்கப்பட்ட சென்னை சென்டிரல்- ஷாலிமர் எக்ஸ்பிரஸ் ரயில் மாலை 4.20 மணிக்கு இயக்கப்படுகிறது.
மாலை 4.15 மணிக்கு இயக்கப்பட்ட பெங்களூர் சிட்டி-தர்பங்கா பக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் மாலை 4.20 மணிக்கு புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை எழும்பூர்
சென்னை எழும்பூரில் இருந்து இரவு 8.05 மணிக்கு புறப்படும் சென்னை எழும்பூர் - செங்கோட்டை பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் இரவு 8.10 மணிக்கு புறப்பட்டு செல்லும்.
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்துக்கு அதிகாலை 4.50 மணிக்கு வந்து சேரும் சேலம்-சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் அதிகாலை 4.40 மணிக்கு வந்து சேரும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
ரயிகளின் வருகை
அதிகாலை 3.10 மணிக்கு வரும் தன்பாத்-ஆலப்புழை எக்ஸ்பிரஸ் ரயில் அதிகாலை 2.55 மணிக்கு வந்து சேரும்.
காலை 9.05 மணிக்கு வரும் ஜோலார்பேட்டை- சென்னை சென்டிரல் எக்ஸ்பிரஸ் ரயில் காலை 9.15 மணிக்கு வந்தடைகிறது.
காலை 10.30 மணிக்கு மணிக்கு வரும் திருப்பதி-சென்னை சென்டிரல் எக்ஸ்பிரஸ் ரயில் காலை 11.30 மணிக்கும், மதியம் 1.15 மணிக்கு வரும் திருப்பதி-சென்னை சென்டிரல் எக்ஸ்பிரஸ் ரயில் மதியம் 1.40 மணிக்கும் வந்து சேரும்.
பிற்பகல் 3.50 மணிக்கு வரும் பெங்களூர் சிட்டி- தர்பங்கா பக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் பிற்பகல் 3.55 மணிக்கும், இரவு 8.35 மணிக்கு வரும் திருப்பதி- சென்னை சென்டிரல் எக்ஸ்பிரஸ் ரயில் இரவு 9.35 மணிக்கும் வந்து சேரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ்
சென்னை எழும்பூரில் இருந்து திருச்சி வரை செல்லும் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில் (வ.எண்:12605/12606) காரைக்குடி வரை செல்லும் என்று கூறப்பட்டுள்ளது.
தற்போது சென்னை எழும்பூரில் இருந்து கும்பகோணம் வரை செல்லும் மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில்(16877/16878) திருச்சியுடன் நிறுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
குருவாயூர் எக்ஸ்பிரஸ்
சென்னை எழும்பூரில் இருந்து குருவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில்(16127/16128) மதுரை வரை இணைக்கப்படும் என்றும் ஒரு பகுதி ரயில்(16129/16130) தூத்துக்குடி வரை செல்லும் என்றும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இதே போன்று மங்களூரில் இருந்து திருச்சி வரை செல்லும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில்(12653/12654) புதுச்சேரி வரை நீடிப்பு செய்யப்பட்டுள்ளது.
ஏலகிரி எக்ஸ்பிரஸ்
இந்த தூரம் நீட்டிப்பு மற்றும் குறைப்பு சேவை குறித்த தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை சென்டிரலில் இருந்து திருப்பத்தூர் வரை செல்லும் ஏலகிரி எக்ஸ்பிரஸ்(16089/16090) வருகிற 1ஆம் தேதி முதல் ஜோலார்ப்பேட்டை வரை செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications