ஜம்மு காஷ்மீர்: அரசிடம் நஷ்டஈடு பெற 4 வயது மகளை கழுத்தை அறுத்துக் கொன்ற நபர்
ஸ்ரீநகர்: மாநில அரசின் நிதிக்கு ஆசைப்பட்டு ஜம்மு காஷ்மீரில் ஒருவர் தனது 4 வயது மகளின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளால் கொல்லப்படும் அப்பாவி மக்களின் குடும்பத்தாருக்கு மாநில அரசு சார்பில் நஷ்டஈடு வழங்கப்படுகிறது. இந்த பணத்தை பெற ஒருவர் தனது மகளையே கொலை செய்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தைச் சேர்ந்தவர் அல்தாப். அவரது மனைவி பஞ்சாயத்து தலைவியாக உள்ளார். அவர்களுக்கு ஒரு மகனும், மஸ்கன் என்ற 4 வயது மகளும் உள்ளனர். இந்நிலையில் அல்தாப் தனது மனைவி மற்றும் மகனை வெளியே அனுப்பிப்பிவிட்டு மகளின் கழுத்தை அறுத்துக் கொலை செய்தார். ஆனால் தனது மகள் மாயமாகிவிட்டதாக கடந்த 14ம் தேதி அவர் சொபோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
இந்நிலையில் மஸ்கனின் உடல் ஒரு சாக்குப் பையில் லைசர் கிராமத்தில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அல்தாப் தனது மகளை தீவிரவாதிகள் கொன்றுவிட்டனர் என்று கூறி அரசிடம் இருந்து பணம் வாங்க திட்டமிட்டிருந்தது தெரிய வந்தது. இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் அல்தாபை கைது செய்தனர்.
அல்தாபுக்கு மஸ்கன் தனக்கு பிறந்தவர் இல்லை என்ற சந்தேகம் இருந்துள்ளது. அல்தாபுக்கு திருமணமான 9 மாதத்திற்குள் மஸ்கன் பிறந்துவிட்டதால் அவருக்கு இந்த சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அந்த வெறுப்பிலும், அரசிடம் இருந்து பணம் பெரும் நோக்கிலும் அவர் சிறுமியை கொலை செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications