இனி, காஸ்மெடிக்ஸ் சோதனையிலிருந்து ‘எலி’ தப்பிச்சுடுச்சு...

Subscribe to Oneindia Tamil

India bans cruel animal testing for cosmetics, activists elated
மும்பை: அழகு சாதனப்பொருட்களை விலங்குகளின் மீது பரிசோதித்து சோதனை செய்வதற்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது இந்தியா.

புதிதாக கண்டுபிடிக்கப்படும் மருந்துகளோ அல்லது அழகு சாதனப் பொருட்களோ முதலில் விலங்குகளை வைத்ஹ்டு பரிசோதனை செய்யப்படுவது தான் வழக்கம். நீண்ட நெடுங்காலமாக இருந்து வரும் இம்முறைக்கு மிருகங்கள் வதை தடுப்பு ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், தற்கு தடை விதிக்கக் கோரி போராடியும் வருகின்றனர்.

இந்நிலையில் இந்திய மதிப்பீட்டு செயலகம் அழகுசாதனப் பொருட்களைப் பரிசோதிக்க விலங்குகளை உபயோகிப்பதைத் தடை செய்து நேற்று உத்தரவு பிறப்பித்தது. அதற்குப் பதிலாக நவீன செயற்கை முறைப் பரிசோதனைகளையும் அது கட்டாயமாக்கியுள்ளது. இந்த உத்தரவு அறிக்கையை இந்திய மருந்து கட்டுப்பாட்டு கழகத்தின் மேலாளர் டாக்டர் ஜி.என். சிங் வெளியிட்டுள்ளார்.

அரசின் இந்த உத்தரவை, ஹியுமன் சொசைட்டி இன்டர்நேஷனல், பீப்பிள் பார் எதிகல் டிரீட்மெண்ட் ஆப் அனிமல்ஸ், பீப்பிள் பார் அனிமல்ஸ் போன்ற மிருகங்கள் வதை தடுப்புக் குழுவின் உறுப்பினர்கள் வரவேற்றுள்ளனர். இதற்காக முழு முயற்சி மேற்கொண்ட தனது முழு ஒத்துழைப்பையும் அளித்த மேனகா காந்திக்கும் அவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

இந்த உத்தரவின் மூலம் தெற்கு ஆசிய நாடுகளிலேயே இத்தகைய சட்டத்தை அமல்படுத்திய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+