விபத்தில் சிக்கி உயிருக்கு போராடும் ஆம் ஆத்மி வேட்பாளர்: சதி என்கிறார் கெஜ்ரிவால்

டெல்லி சட்டசபை தேர்தலில் சீமாபுரி தொகுதியில் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர் சந்தோஷ் கோலி. நேற்று அவர் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த குல்தீப் என்பருடன் பைக்கில் கட்சி அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்தார். இந்திராபுரம் பகுதி கௌஷம்பி மெட்ரோ ரயில் நிலையம் அருகே செல்கையில் வேகமாக வந்த கார் ஒன்று பைக்கை பின்னால் இருந்து மோதிவிட்டு மின்னல் வேகத்தில் பறந்து சென்றது.
இதில் கோலியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு தலையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டுள்ள அவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
இந்நிலையில் இது குறித்து கெஜ்ரிவால் கூறுகையில்,
எங்களிடம் எந்த ஒரு ஆதாரமும் இல்லை. ஆனால் இது விபத்து போன்று தோன்றவில்லை. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றார்.
போலீசார் கார் டிரைவர் மீது கொலை முயற்சி மற்றும் தாறுமாறாக வண்டியை ஓட்டியது ஆகிய குற்றங்கள் சுமத்தி வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications