உத்தர்காண்ட் மறுசீரமைப்புக்கு புதிய அமைப்பு- பாதிக்கப்பட்டோருக்கு சலுகைகள்: முதல்வர் விஜய் பகுகுணா அ
டேராடூன்: பெருமழை வெள்ளத்தால் உருக்குலைந்து போன உத்தர்காண்ட் மாநிலத்தை மறுசீரமைக்க புதிய அமைப்பு நிறுவப்படும் என்று அம்மாநில முதல்வர் விஜய் பகுகுணா அறிவித்துள்ளார்.
டேராடூனில் மத்திய அமைச்சர் அம்பிகா சோனி, ஜெய்ரா ரமேஷ் ஆகியோர் முதல்வர் விஜய் பகுகுணாவுடன் வெள்ள மீட்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் விஜய் பகுகுணா, இதுவரை சுமார் 1 லட்சம் பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

உத்தர்காண்ட் மறுசீரமைப்பு மற்றும் மீள்கட்டமைப்புக்கான ஒரு அமைப்பு உருவாக்கப்படும். இனி ஆற்றின் கரையோரங்களில் எந்த ஒரு கட்டுமானப் பணிக்கும் அனுமதி கொடுக்கமாட்டோம். இண்டர்மீடியட் படிக்கும் மாணவர்களுக்கு நிவாரணமாக ரூ500ம் கல்லூரி மாணவர்களுக்கு ஆயிரம் ரூபாயும் நிவாரண நிதியாக ஒரு முறை வழங்கப்படும். அரசு வங்கிகளின் கடன்பெற்றோர் ஓராண்டுக்கு வட்டி கட்ட தேவையில்லை. குடிநீரும் மின்சாரமும் இலவசமாக கொடுக்கப்படும்.
சிறு தொழில் நிறுவனங்களுக்கு ரூ50ஆயிரம் முதல் ரூ1 லட்சமும் சிறு ஹோட்டல்களுக்கு ரூ2 லட்சமும் நிவாரணத் தொகை வழங்கப்படும். வெள்ளத்தில் பெற்றோரை பறிகொடுத்த குழந்தைகளை அரசே பராமரிக்கும் என்றார்.
இதேபோல் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், உலக வங்கி மற்று ஆசிய அபிவிருத்தி வங்கிகளிடம் இருந்து உத்தர்காண்ட் மறுசீரமைப்புக்கான உதவி கேட்கப்படும். இம்மாநிலத்தில் 100 நாள் வேலை வாய்ப்புத் திட்டம் 150 நாட்களாக அதிகரிக்கப்படும். மத்திய அரசின் நிதி உதவியுடன் 14 ஆயிரம் வீடுகள் கட்டித்தரப்படும். இதேபோல் 1400 கிராமங்களை இணைக்கும் சாலைகளை மத்திய அரசு சீரமைத்து தரும். மத்திய நிதி அமைச்சக குழு விரைவில் உத்தர்காண்ட் சென்று இழப்பீட்டை மதிப்பீடு செய்யும் என்றார் அவர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications