மாட்டுத் தீவன ஊழல் வழக்கு: வேறு நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரிய லாலுவின் மனு தள்ளுபடி!
ராஞ்சி: தமக்கு எதிரான மாட்டு தீவன ஊழல் வழக்கை வேறு சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சித்தலைவர் லாலு பிரசாத் யாதவ் தாக்கல் செய்த மனுவை ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துவிட்டது.
பீகார் மாநிலத்தில் கடந்த 1990-ம் ஆண்டில் ரூ.37.7 கோடி மாட்டுத் தீவன ஊழல் தொடர்பாக விசாரணை ராஞ்சியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில் லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்ட 44 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கில் வரும் 15-ந் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று சிறப்பு நீதிமன்ற நீதிபதி பிரவாஸ் குமார் சிங் உத்தரவிட்டிருந்தார்.

ஆனால் திடீரென கடந்த வாரம் இந்த வழக்கு விசாரணையை வேறு சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும். நீதிபதி பிரவாஸ்குமார் சிங், ஆளும் ஐக்கிய ஜனதா தளக் கட்சியின் மூத்த தலைவர்களின் உறவினர். இதனால் நியாயமான தீர்ப்பு வழங்கமாட்டார் என்று ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றத்தில் லாலு பிரசாத் யாத்வ் சார்பில் ஒரு மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை இன்று விசாரித்த ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் அதை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதனால் வரும் 15-ந் தேதி மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுவது உறுதியாகி இருக்கிறது. லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மாட்டுத் தீவன ஊழல் வழக்கின் தீர்ப்பு மிக முக்கியமானதாகவும் கருதப்படுகிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications