மார்ட்டின் கட்டடங்களுக்கு சீல் வைத்த கோவை மாநகராட்சி

Subscribe to Oneindia Tamil

Corporation officials seal Martin's buildings in Coimbatore
கோயம்பத்தூர்: லாட்டரிச் சீட்டு அதிபர் மார்ட்டினுக்குச் சொந்தமான கட்டடங்களுக்கு கோவை மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்து விட்டனர்.

இன்றுகாலை இந்த சீல் வைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது. கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் ஓஹோவென வலம் வந்தவர் கோவையைச் சேர்ந்த மார்ட்டின். அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு அவர் மீது சரமாரியாக பல்வேறு வழக்குகள் பாய்ந்தன. கைதும் ஆனார்.

இதை சமாளிக்க அவரது மனைவி பாரிவேந்தரின் கட்சியில் சேர்ந்து கூடப் பார்த்தார். இருப்பினும் மார்ட்டின் மீதான நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டுள்ளன.

இந்த நிலையில் கோவை, கிராஸ்கட் வீதியில் உள்ள 4 மாடி கொண்ட நான்கு கட்டிடங்களுக்கு அதிகாரிகள் திடீரென சீல் வைத்து மூடினர். முறையான அனுமதி இல்லாதது, அனுமதி பெறாமல் கட்டியது. விதிமீறல் ஆகிய புகார்களின் பேரில் இந்த நடவடிக்கையாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+