"ராஜீவிடம் கேள்வி கேட்டு திணறடித்தவர் ஜெயலலிதா மட்டுமே...."
சேலம்: இந்தியாவின் பிரமதர்களாக இருந்த 8 பேரை கேள்வி கேட்டை திணறடித்தவர் முதல்வர் ஜெயலலிதா மட்டுமே. ராத்திரி பத்து மணிக்கெல்லாம் தூங்கப் போய் விட்டதற்காக ராஜீவ் காந்தியை விமர்சித்தவர் முதல்வர் மட்டுமே என்று பேசியுள்ளார் பள்ளிக்கல்வித்துறை மற்றும் இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சரான வைகைச் செல்வன்.
சேலம் ஓமலூரில் சேலம் புறநகர் மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு வைகைச் செல்வன் தலைமை தாங்கினார்.
இதில் வைகைச் செல்வன் பேச்சு செமையாக இருந்தது. அவர் பேசியபோது ஜெயலலிதாவை ஏகத்திற்கும் புகழ்ந்து தள்ளி விட்டார். அதிலிருந்து சில துளிகள்...

என்னா கூட்டம் என்னா கூட்டம்...
தமிழகத்தில் நான் கலந்து கொண்ட கூட்டங்களிலேயே ராணுவத்துக்கு இணையான கூட்டத்தை நான் ஓமலூரில் மட்டுமே கண்டுள்ளேன். கூட்டத்திற்கு நகர எல்லையில் இருந்து மேடைக்கு வருவதற்குள் அரை மணிநேரம் ஆனது.

இங்கு திட்டங்கள்.. அங்கு வெற்றி
கர்நாடகம் , உத்திரபிரதேசம் ஆகிய மாநிலங்கள் தமிழகத்தின் திட்டங்களை முன்னிறுத்தி வெற்றி பெற்றன.

எட்டு பேரை கேள்வி கேட்ட தலைவி
எட்டு இந்திய பிரதமர்களை கேள்வி கேட்கும் முதல்வராக புரட்சி தலைவி திகழ்கிறார்.

ராஜீவ் காந்தியை ஒருமுறை...
ராஜீவ்காந்தியை ஓரு முறை இரவு பத்து மணிக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது பிரதமர் தூங்க சென்று விட்டார் என பதில் வந்தது. ஆனால் தைரியமாக நமது புரட்சித் தலைவி, இரவு பத்து மணிக்கு இந்திய பிரதமர் தூங்கினால் நாடு என்னாவது என்று கேள்வி கேட்டவர் ஜெயலலிதாதான்.

ஜெயலலிதாவுக்கு மட்டுமே தைரியம்
ராஜீவ் காந்தி முதல் இன்று இருக்கும் பிரதமர் மன்மோகன் சிங் வரை கேள்வி கேட்கும் தைரியம் முதல்வர் ஜெயலலிதாவிற்கு மட்டுமே உண்டு.

இதுவரை 6 விழாதான்.. இனி அது 7
இதுவரை அதிமுகவில் வருடத்தில் ஜெயலலிதா பிறந்தநாள், அண்ணா பிறந்த நாள் உட்பட 6 விழாக்களை மட்டுமே கொண்டாடி வந்தோம். அம்மாவின் உத்தரவுபடி இனிமேல் 7-வதாக இளைஞர் இளம்பெண்கள் பாசறை எழுச்சி நாள் கொண்டாடி வருகிறோம்.

ஓயாம உழைங்க...!
ஜெயலலிதாவை பிரதமராக்காமல் ஓய மாட்டோம் என ஒவ்வொரு இளைஞர்- இளம்பெண்கள் பாசறையினர் ஓயாமல் உழைக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார் வைகைச் செல்வன்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications