ஸ்பெக்ட்ரம் வழக்கில் ஆஜராக விலக்கு கோரும் தயாளு மனு..டெல்லி உயர்நீதிமன்றம் நீதிபதி காட்டம்!

ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டின் மூலம் கலைஞர் தொலைக்காட்சி ஆதாயம் அடைந்ததாக தொடரப்பட்ட வழக்கில் தயாளு அம்மாளை சிபிஐ அரசு தரப்பு சாட்சியாக சேர்த்துள்ளது. இதனால் அவர் விசாரணைக்கு ஆஜராகி சாட்சியம் அளிக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் தயாளு அம்மாளுக்கு உடல்நிலைக் குறைவு என்றும் அவரால் எதையும் உணரக் கூட முடியாது என்றெல்லாம் கூறி நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இம்மனுவை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ஏற்கெனவே நிராகரித்தது.
இதைத் தொடர்ந்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் தயாளு அம்மாள் சார்பில், சிபிஐ நீதிமன்ற விசாரணையில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இம்மனுவை இன்று விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், தயாளு அம்மாள் தாக்கல் செய்திருக்கும் மனுவானது வழக்கின் விசாரணையை முடக்கும் நோக்கம் கொண்டது. அவர் டெல்லி வந்தால் அவரது உடநிலை பற்றி முடிவு செய்யலாம். இந்த வழக்கின் மீது நாளை விசாரணை நடைபெறும் என்று உத்தரவிட்டது.
முன்னதாக இன்றைய விசாரணையின் போது ஆஜரான சிபிஐ தரப்பு வழக்கறிஞர், இதுபோன்ற வழக்குகளை உச்சநீதிமன்றமும் சிபிஐ நீதிமன்றமுமே விசாரிக்க முடியும் என்று வாதிட்டார்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications