இந்து முன்னணி நிர்வாகியின் உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்படுகிறது

நெல்லை மாவட்டம் சங்கரன் கோவிலை அடுத்த சேர்ந்தமரம் துரைசாமிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சு. வெள்ளையப்பன் அவர் திருமணம் செய்யாமலே பிரமச்சாரியாக சொந்த ஊரை விட்டு கடந்த 25 வருடங்களுக்கு முன் பிழைப்புக்காக வேலூர் சென்றார். அங்கு சென்று தொழில் செய்த அவர் இந்து முன்னணி அமைப்பில் பொறுப்பேற்று திவீரமாக பணியாற்றி வந்தார்.
கடந்த 2.ஆண்டுகளுக்கு முன் இந்த அமைப்பின் மாநில செயலாளராக பொறுப்பேற்றார். இந்நிலையில் அவர் நேற்று வேலூரில் கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது கொலை பற்றிய தகவல்கள் கிடைத்த உடன் நெல்லை, கன்னியாக்குமரி மாவட்டங்களில் இரவு 7 மணி முதல் இன்று காலை 8 மணி வரை பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மேலும் சங்கரன்கோவில் வட்டாரத்தில் அணைத்து பேருந்துகளும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டு வருகிறது.
உடல் இன்று சொந்த ஊருக்கு வருகை
அவரது அண்ணன் கந்த சாமி குடும்பம் துரைசாமிபுரத்தில் உள்ளதால் இங்கு அவரது உடல் இன்று கொண்டு வரப்பட்டு அடக்கம் செய்யப்படுகிறது. இதனால் நெல்லை மாவட்டத்தில் பரப்பரப்பான சூழல் நிலவி வருகிறது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நெல்லை மாவட்டம் தென்காசியில் இந்து முன்னணி தலைவர் குமார் பாண்டியன் கொலை செய்யப்பட்டதற்குப் பின் இதே மாவட்டத்தை சேர்ந்த இந்து முன்னணி பிரமுகர் ஒருவர் தற்ப்போது கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த அமைப்பினர் மத்தியில் அதிர்ச்சியையும், பரப்பரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

வேலூரில் இருந்து இந்து முன்னணியினர் அடுக்கம் பாறை மருத்துவமனைக்கு இன்று காலை ஊர்வலமாக சென்றனர். அப்போது 6 பஸ்கள் கல்வீசி உடைக்கப்பட்டது. வேலூர் அண்ணா சாலையில் லட்சுமி தியேட்டர் அருகே 2 பஸ்களும், பாகாயம் காவல் நிலையம் அருகில் 2 பஸ்களும், தொரப்பாடியில் ஒரு பஸ்ஸும், தந்தை பெரியார் என்ஜீனியரிங் கல்லூரி அருகில் ஒரு பஸ்ஸும் கல்வீசி உடைக்கப்பட்டன. தொடர்ந்து வேலூரில் பதட்டம் நிலவுவதால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அதிகாலையில் அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications