''இந்தாங்க ஹங்... 46 வருஷத்துக்கு முன்னாடி நா எடுத்துட்டுப் போன உங்க ‘கை’ எலும்பு''
ஹனாய்: சுமார் 46 வருடங்களுக்கு முன்னதாக துண்டிக்கப்பட்ட கை எலும்பை மருத்துவர் ஒருவரின் உதவியால், தற்போது மீண்டும் பெற்றுள்ளார் வியட்நாம் வீரர் ஒருவர்.
1966-ம் ஆண்டு அமெரிக்ககா, வியட்நாம் ஆகிய நாடுகளுக்கிடையே நடந்த போரில், அமெரிக்க ராணுவத்தின் திடீர் தாக்குதலால் குயென் குவாங் ஹங் என்ற வியட்நாம் வீரர் தனது வலது கையில் குண்டடி பட்டார். குண்டு பாய்ந்த கையோடு மூன்று நாட்கள் அரிசி குடோன் ஒன்றில் ஒளிந்திருந்தார் ஹங்.
மூன்று நாட்களுக்குப் பிறகு, குண்டடி பட்டதில் அழுகிய கைகளோடு ஹங், அமெரிக்க ராணுவத்தினரால் மீட்கப் பட்டார். அமெரிக்க ராணுவ டாக்டர் சாம் ஆக்சல்ராட்டிடம் சிகிச்சை பெற்ற ஹங்கின் வலது கை துண்டிக்கப்பட்டது.அழுகிய சதைகளை நீக்கிய சாம், எஞ்சிய ஹங்கின் வலது கை எலும்பை எடுத்துக் கொண்டு அமெரிக்கா சென்று விட்டார்.
இந்நிலையில், கடந்தாண்டு பத்திரிக்கை ஒன்றில் வியட்நாம் வீரரான 73 வயது ஹங் தற்போது உயிருடன் இருக்கும் செய்தியை படித்த டாக்டர் சாம், 40 வருடங்களுக்கு மேலாக தான் பாதுகாத்து வைத்திருக்கும் ஹங்கின் கை எலும்பை கொடுக்க விரும்புவதாக பதில் செய்தி வெளியிட்டார்.
இதனால், இருவரும் சந்தித்துக் கொள்ள ஏற்பாடு செய்யப் பட்டது. மகன்கள் மற்றும் பேரக் குழந்தைகளுடன் வந்திருந்த டாக்டர் சாம், 46 வருடங்களாக தான் பாதுகாப்பாக வைத்திருந்த ஹங்கின் வலது கை எலும்பை ஹங்கிடம் ஒப்படைத்தார். அதனை தனது இடது கையால் பெற்றுக் கொண்ட ஹங், டாக்டருக்கு நன்றி கூறினார்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications