நாடு முழுவதும் தொடர் கதையாகும் என்கவுன்ட்டர் சம்பவங்கள்

குஜராத் மாநிலத்தில் இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட 4 பேர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டது 2004ஆம் ஆண்டு. அதே 2004-2005ஆம் ஆண்டுகாலப் பகுதியில் நடந்த என்கவுன்ட்டர்கள் பற்றி தேசிய மனித உரிமைகள் ஆணையம் இப்படி சொல்கிறது.. "இந்த காலகட்டத்தில் பல்வேறு மாநில அரசுகள் நடத்திய என்கவுன்ட்டர்கள் பற்றி 122 சம்பவங்கள் பற்றி புகார்கள் வந்துள்ளன. இதில் 66 சம்பவங்கள் உத்தரப்பிரதேசத்தில் 18 சம்பவங்கள் ஆந்திர பிரதேசத்திலும் 9 டெல்லியிலும் தலா 5 சம்பவங்கள் மத்திய பிரதேசம், மகாராஷ்டிராவில் இருந்து கிடைத்துள்ளன. இதுமட்டுமின்றி போலி என்கவுன்ட்டர்கள் தொடர்பாக 84 புகார்கள் வந்துள்ளன என்கிறது.
இதேபோல் இன்னொரு புள்ளி விவரத்தையும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் முன்வைக்கிறது. 2004-2005ஆம் ஆண்டு காலப் பகுதியில் பாஜக ஆளும் குஜராத்தில் ஒரு என்கவுன்ட்டர், காங்கிரஸ் ஆளும் ஆந்திராவில் 6, சமாஜ்வாடி ஆளும் உ.பி.யில் 54, காங்கிரஸ் ஆளும் ஹரியானாவில் 4 என்கவுன்ட்டர்கள் புகார்கள் முடித்து வைக்கப்பட்டுள்ளன. குஜராத்தில் 5 என்கவுன்ட்டர் சம்பவங்கள் நிலுவையில் உள்ளன. ஆந்திராவில் 21, மகாராஷ்டிராவில் 29, உ.பி.யில் 175, டெல்லியில் 18, உத்தர்காண்ட்டில் 14 என்கவுன்ட்டர் புகார்கள் நிலுவையில் இருக்கின்றன என்கிறது அந்த அறிக்கை.
அண்மையில் கடந்த மார்ச் மாதம் லோக்சபாவில் மத்திய உள்துறை இணை அமைச்சர் ஆ.பி.என்.சிங் தாக்கல் செய்த பதில் ஒன்றில், 2009-10 மற்றும் 2012-13ஆம் ஆண்டுகாலத்தில் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தால் போலி என்கவுன்ட்டர்கள் தொடர்பாக மொத்தம் 555 புகார்கள் பெறப்பட்டுள்ளன. இதில் 144 புகார்கள் முடித்து வைக்கப்பட்டுள்ளன. எஞ்சிய 411 புகார்கள் நிலுவையில் உள்ள என்று தெரிவித்திருந்தார்.
மேலும் அவர் அளித்த பதில், 2009-2012ஆம் ஆண்டுகாலப் பகுதியில் மணிப்பூர் மற்றும் உத்தரப்பிரதேசத்தில்தான் அதிக எண்ணிக்கையிலான என்கவுண்ட்டர்கள் நடைபெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2010-11ஆம் ஆண்டுகாலப் பகுதியில் உ.பி.யில் 40 என்கவுன்ட்டர்களும், அசாம், ஆந்திரா, ஹரியானா மாநிலங்களில் மொத்தம் 30 என்கவுன்ட்டர்களும் நிகழ்ந்துள்ளன. 2011-12ஆம் ஆண்டு காலத்திலும் உ.பி.யில் தான் என்கவுன்ட்டர் சம்பவங்கள் அதிகமாக நடந்திருக்கின்றன.
20002-2007ஆம் ஆண்டு காலப் பகுதியில் குஜராத்தில் 5, உத்தரப்பிரதேசத்தில் 231, ராஜஸ்தானில் 33, மகாராஷ்டிராவில் 31, டெல்லியில் 26, ஆந்திராவில் 26, உத்தர்காண்ட்டில் 19, அசாமில் 12, ம.பி., கர்நாடகாவில் 10, தமிழ்நாட்டில் 9, மேற்குவங்கத்தில் 8, பீகார். ஹரியானாவில் 6 என்கவுன்ட்டர் சம்பவங்கள் பதிவாகி இருப்பதாகவும் தேசிய மனித உரிமைகள் கவுன்சில் தெரிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் என்கவுன்ட்டர் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன..
மேலும் விரிவான கட்டுரைக்கு...
http://www.niticentral.com/2013/07/03/ishrat-jahan-case-shamelessly-politicised-98713.html












Click it and Unblock the Notifications