மணிப்பூரில் அமைச்சர்களை இலக்கு வைத்து தாக்குதல்! திடீர் துப்பாக்கி சண்டை!!
சேனாபதி: மணிப்பூர் மாநிலத்தில் இரு அமைச்சர்களை இலக்கு வைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த முயன்றனர். அப்போது அமைச்சர்களின் பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நிகழ்ந்தது.
மணிப்பூர் மாநில தொழில்துறை அமைச்சர் ரதன்குமார், நீர்ப்பாசனத்துறை அமைச்சர் ஞாம்தங் இருவரும் சேனாபதி மாவட்டத்தில் மேம்பாட்டுப் பணிகளை ஆராய்ந்து விட்டு தலைநகர் இம்பால் நோக்கி திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது நாகாலாந்து செல்லக் கூடிய கோஹிமா- இம்பால் நெடுஞ்சாலையில் கோபிபங்க் என்ற இடத்தில் மலைப் பதுங்கியில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் திடீரென அமைச்சர்களை நோக்கி சுடத் தொடங்கினர். இதைத் தொடர்ந்து பாதுகாப்பு அதிகாரிகள் பதிலடி கொடுத்தனர்.
அமைச்சர்களின் பாதுகாப்பு அதிகார்ரிகளுக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையேயான துப்பாக்கிச் சூடு சில நிமிடங்கள் நீடித்தன.பின்னர் தீவிரவாதிகள் மலைப் பகுதிகளில் பதுங்கிக் கொண்டனர். இதனால் இம்பாலில் பரபரப்பு ஏற்பட்டது.
இதனிடையே இம்பால் நகர கூட்டுறவு வங்கித் தலைவர் தோக்சோம் திலீப் என்பவரது வீடு மீது தீவிரவாதிகள் சிலர் சக்தி வாய்ந்த வெடிகுண்டை வீசித் தாக்குதல் நடத்தியுள்லனர். இதில் அவரது வீட்டின் ஒருபகுதி சேதமடைந்துள்ளது. இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து அவரது ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர்.












Click it and Unblock the Notifications