சேலம் சிறையில் சோதனை: செல்போன், பணம் பறிமுதல்
சேலம்: சேலம் மத்திய சிறையில் இன்று நடைபெற்ற அதிரடி சோதனையில் 3 செல்போன்கள், சார்ஜர்கள், ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
சேலம் மத்திய சிறையில் 800-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிலர் கஞ்சா பதுக்கி வைத்து இருப்பதாகவும், சிலர் செல்போன் வைத்து பேசுவதாகவும் தகவல் கூறப்பட்டது. இவர்களை சிறை அதிகாரிகள் கண்காணித்தும் பிடிக்கமுடியவில்லை.
இந்த நிலையில் சென்னை விஜிலென்ஸ் டி.எஸ்.பி.ஹரி தலைமையில் 8 போலீசார் இன்று அதிகாலையில் சேலம் சிறைக்குள் திடீரென சென்று அனைத்து கைதிகளின் அறைகளில் அதிரடி சோதனை நடத்தினர். சென்னை போலீசாருடன் சேலம் சிறைத்துறை அதிகாரிகளும் இணைந்து இந்த சோதனையில் ஈடுபட்டனர்.
கஞ்சா ஏதும் இருக்குமா என போலீசார் அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தினர். ஆனால் கஞ்சா சிக்கவில்லை. ஆனால் 3 செல்போன்கள், 3 சார்ஜர்கள், 5 பேட்டரி மற்றும் ரொக்கம் ரூ.2500 ஆகியவை சோதனையில் சிக்கியது. இவைகளை யார் யார் பதுக்கி வைத்தனர் என்று விசாரணை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications