நடத்தையில் சந்தேகப்பட்ட குடிகார கணவரை வெட்டிக் கொன்ற மனைவி கைது
திருச்சி: திருச்சி அருகே, குடிபோதையில் மனைவியின் நடத்தையை சந்தேகப்பட்டு தகராறு செய்த கணவரை மனைவியே வெட்டிக் கொலை செய்துள்ளார்.
திருச்சி மாவட்டம், வையம்பட்டி அருகிலுள்ள பெரியகுளத்துப்பட்டியைச் சேர்ந்தவர் சாமிநாதன் (50). இவரது மனைவி ஜோஸ்பின் சகாயராணி (45). குடிப்பழக்கத்திற்கு அடிமையான சாமிநாதன், தனது மனைவின் நடத்தை மீது சந்தேகம் கொண்டு தொடர்ந்து தகராறு செய்து வந்துள்ளார்.
வழக்கம் போல் குடித்து விட்டு வந்து, நேற்றும் மனைவியிடம் தகராறு செய்துள்ளார் சாமிநாதன். பொறுத்துப் பொறுத்துப் பார்த்த சகாய ராணி, கடைசியில் ஆத்திரத்தில் வீட்டிலிருந்த அரிவாளால் சாமிநாதனை வெட்டினார். இதில், பலத்த காயம் ஏற்பட்டதால் சாமிநாதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
சம்பவம் பற்றி . தகவலறிந்த வையம்பட்டி போலீஸார் விரைந்து வந்து சாமிநாதன் சடலத்தைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து ஜோஸ்பின் சகாயராணியைக் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications