சிவகங்கை மாவட்டத்தில் 60 நாட்களுக்கு 144 தடை உத்தரவு அமல்
Subscribe to Oneindia Tamil
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில், சட்டம், ஒழுங்கை பாதுகாக்க, முன்னெச்சரிக்கையாக, "144' தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
ஆதிதிராவிடர், பழங்குடியினர் இனத்தில் உள்ள, சில உட்பிரிவு ஜாதிகளுக்கும், அரசு சலுகை உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, புதிய தமிழகம் கட்சியினர், சிவகங்கை, மானாமதுரை, திருப்புவனம், தேவகோட்டை உட்பட, மாவட்டத்தில் பல இடங்களில் உண்ணாவிரதம் இருக்க, போலீஸ் அனுமதி கேட்டு, மனுக்கள் கொடுத்தனர்.
சட்டம், ஒழுங்கு பாதுகாக்க, போலீசார் உண்ணாவிரதத்திற்கு அனுமதி மறுத்துள்ளனர். இந்நிலையில், டி.எஸ்.பி.,க்கள், ஸ்டாலின், வெள்ளத்துரை, மங்களேஸ்வரன், மதுரைச்சாமி பரிந்துரையை அடுத்து,"144' தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு, ஜூன், 22 முதல், 60 நாட்களுக்கு அமலில் இருக்கும் என, போலீசார் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications