என்எல்சி போராட்டம் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை
Subscribe to Oneindia Tamil
நெய்வேலி: என்எல்சி ஸ்டிரைக் மற்றும் தொழிற்சங்க கூட்டமைப்பினர் விடுத்த முழு அடைப்பு போராட்டம் எதிரொலியாக இன்று நெய்வேலியில் பள்ளிகளுக்கு விடுமுற விடப்பட்டுள்ளது.
என்எல்சி ஊழியர்களின் போராட்டத்துக்கு நெய்வேலி, மந்தாரக்குப்பம் பகுதி வர்த்தகர்கள், வாகன ஓட்டுநர்கள், உரிமையாளர்கள் சங்கம், கல்விநிறுவனங்கள் ஆகியோரிடம் தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆதரவு கேட்டிருந்தார்கள்.
இதை ஏற்று நெய்வேலி, மந்தாரக்குப்பத்தில் இன்று வர்த்தக நிறவனத்தினர் கடையடைப்பு போராட்டத்திலும், ஆட்டோ,கார்,வேன் ஓட்டுநர் உரிமையாளர்கள் சங்கத்தினர் வேலைநிறுத்த போராட்டத்திலும் ஈடுபட உள்ளார்கள்.
இதன் காரணமாக நெய்வேலியில் நாளை இயல்பு வாழ்க்கை பாதிக்கும் நிலை இருப்பதால் அதைக் கருதி இன்று ஒரு நாள் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications