வீட்டுக்காரருடன் படத்துக்குப் போன பெண்.. அங்கிருந்து கள்ளக்க காதலனுடன் எஸ்....!

Subscribe to Oneindia Tamil

திருப்பத்தூர், சிவகங்கை: கணவருடன் படம் பார்க்கப் போன பெண், வெளியில் போய் விட்டு வருவதாக சொல்லி விட்டு தனது கள்ளக்காதலனுடன் ஓடி விட்டார். இதுகுறித்து போலீஸில் புகார் கொடுத்து விட்டு சோகத்துடன் காத்திருக்கிறார் கணவர்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள கீழையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் 35 வயதான ரமேஷ். இவரது மனைவி பெயர் விஜி. வயது 27. இவர்களுக்கு 5 வருடத்திற்கு முன்பு திருமணம் நடந்தது. ஒரு பெண் குழந்தையும் உள்ளது.

ரமேஷ் வெளிநாட்டு வேலைக்குப் போய் விட்டார். இதனால் தனிமையில் வாடி வந்த விஜி, அக்காள் வீட்டுக்கு அருகே குடியிருக்கும் பிரபு என்பவருடன் கள்ளக்காதலில் திளைத்தார்.

இந்த நிலையில் சமீபத்தில் தனது ஊருக்குத் திரும்பினார் ரமேஷ். 2 நாட்களுக்கு முன்பு மனைவியை அழைத்துக் கொண்டு தியேட்டருக்குப் போனார். படம் பார்த்துக் கொண்டிருக்கும்போது, இதோ வந்து விடுகிறேன் என்று கூறி விட்டு வெளியேறியுள்ளார் விஜி. அத்தோடு சரி.. திரும்ப வரவே இல்லை.

இதனால் குழம்பிப் போன ரமேஷ் வெளியில் வந்து பார்த்துள்ளார். மனைவியைக் காணவில்லை. எங்குதேடியும் அவரைக் கண்டுபிடிக்க முடியாததால், போலீஸில் புகார் கொடுத்தார். அதில் பிரபுதான் தனது மனைவியைக் கடத்திக் கொண்டு போய் விட்டார். எப்படியாவது கண்டுபிடித்துக் கொடுங்கள் என்று புகாரில் கூறியுள்ளார்.

போலீஸார் வழக்குப் பதிவு செய்து மாயமான விஜியையும், அவரது கள்ளக்காதலன் பிரபுவையும் தேடி வருகின்றனர்.

கணவர்மார்களே படம் பார்க்கும்போது சூதானமா இருந்துக்கங்கப்பா...!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+