Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இதற்குத்தான் இத்தனை மோதலா... பாதியிலேயே முடிந்து போன இளவரசனின் போராட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தின் அத்தனை மனங்களையும் நேற்று வெகுவாக பாதித்த விஷயம் இளவரசனின் திடீர் மரணம்தான். முதலில் தற்கொலை என்று செய்திகள் வந்தன.. ஆனால் பின்னர் இது கொலையாக இருக்கலாமோ என்ற சந்தேகங்கள் கிளம்பவே இளவரசனின் மரணச் செய்தி தமிழக மக்களை நேற்று உலுக்கி விட்டது.

ஆழமாக காதலித்து, அதற்காக உற்றார் உறவுகளைக் கூட துறந்தும், ஊரே பற்றி எரிந்தபோதும் பயப்படாமல், துணிகரமாக செயல்பட முடிந்த திவ்யாவும், இளவரசனும், தங்களது காதலைக் காப்பாற்றி வாழ வைக்க முடியாமல் பாதியிலேயே இப்படி சிதைந்து போயிருப்பது பலரையும் வருத்தமுற வைத்துள்ளது.

நீ வேண்டாம் என்று திவ்யா தனது தாயுடன் கிளம்பிச் செல்ல அடுத்த 24 மணி நேரத்தில் இளவரசன் பிணமாக கண்டெடுக்கப்பட்டார்.

அழகாக பூத்த நேசம்

அழகாக பூத்த நேசம்

திவ்யாவுக்கு வயது 20 ஆகிறது. இளவரசனுக்கு 23 வயது. சாதித் திரையால் தங்களது கண்களைக் கட்டிக் கொள்ளாமல், இதயத் திரையைத் திறந்து இருவரும் ஆழமாக நேசிக்க ஆரம்பித்தனர்... பூத்தது அழகான காதல்.

கல்லூரிச் சாலையில் பூத்த காதல்

கல்லூரிச் சாலையில் பூத்த காதல்

இளவரசன் தர்மபுரி கல்லூரியில் படித்து வந்தார். திவ்யா, நர்சிங் கல்லூரியில் படித்தார். இளவரசனின் ஊர் நத்தம் காலனி. திவ்யாவின் ஊர் செல்லங்கொட்டாய். இருவரும் கல்லூரிக்குப் போகும் வழியில் சந்தித்துப் பேசி காதலை வளர்த்து வந்தனர்.

கிளம்பிய எதிர்ப்புகள்

கிளம்பிய எதிர்ப்புகள்

இந்த நிலையில் இருவரது குடும்பத்துக்கும் இவர்களது காதல் தெரிய வந்தது. அவ்வளவுதான்.. திவ்யாவின் குடும்பத்தினர் பொங்கி எழுந்து விட்டனர். வீட்டில் எதிர்ப்புக் கிளம்பியதால் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்யும் முடிவுக்கு வந்தனர்.

2012, அக்டோபர் 10ம் தேதி கல்யாணம்

2012, அக்டோபர் 10ம் தேதி கல்யாணம்

கடந்த ஆண்டு அக்டோபர் 10ம் தேதி இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர்.

நத்தனம் காலனியில் குடித்தனம்

நத்தனம் காலனியில் குடித்தனம்

திருமணத்திற்குப் பின்னர் சேலம் சரக டிஐஜியிடம் தஞ்சமடைந்து பாதுகாப்பு கோரினர். பின்னர் நத்தம் காலனிக்குப் புறப்பட்டனர். அங்கு இளவரசன் குடும்பம் திவ்யாவை அன்புடன் வரவேற்றது. இருவரும் குடும்ப வாழ்க்கையை ஆரம்பித்தனர்.

ஓடி வந்த தாய்

ஓடி வந்த தாய்

திவ்யா நத்தம் காலனியில் இருப்பதை அறிந்த அவரது தாயார் தேன்மொழி அங்கு விரைந்து சென்றார். மகளை தன்னுடன் வருமாறு அழைத்தார். ஆனால் திவ்யா வர மறுத்து விட்டார்.

தந்தையின் திடீர் தற்கொலை

தந்தையின் திடீர் தற்கொலை

இந்த நிலையில் நவம்பர் 7ம் தேதி திவ்யாவின் தந்தை நாகராஜ் திடீரென தற்கொலை செய்து கொண்டார்.

வெடித்தது கலவரம்

வெடித்தது கலவரம்

நாகராஜ் தற்கொலையால் அவரது சமூகத்தினர் கொதித்தெழுந்தனர். நத்தம் காலனி, அண்ணாநகர், கொண்டாம்பட்டி ஆகிய 3 கிராமங்களுக்குள் புகுந்து கொலை வெறியாட்டம் ஆடி வி்ட்டனர். நூற்றுக்கணக்கான வீடுகளைச் சூறையாடி விட்டனர். பல வீடுகள் தீவைத்து எரிக்கப்பட்டன. நாடே பதறிப் போய்ப் பார்த்தது இந்த சாதி வெறி வன்முறையை.

நான் மேஜர்.. விரும்பித்தான் இளவரசனுடன் சென்றேன்

நான் மேஜர்.. விரும்பித்தான் இளவரசனுடன் சென்றேன்

இந்த நிலையில் திவ்யாவின் தாயார் தேன்மொழி தர்மபுரி கோர்ட்டில் ஒரு மனு செய்தார். அதில் தனது மகளைக் கடத்தி விட்டதாக கூறியிருந்தார். இதையடுத்து கோர்ட்டில் ஆஜரான திவ்யா, நான் மேஜர், நானாக விரும்பித்தான் இளவரசனை திருமணம் செய்து கொண்டேன் என்று வாக்குமூ்லம் அளித்தார்.

பெங்களூர் விரைந்தனர்

பெங்களூர் விரைந்தனர்

இந்த சமயத்தில்தான் அரசியல் குறுக்கீடுகள் ஆழமாக கிளம்ப ஆரம்பித்தன. நிச்சயம் நம்மை இந்த சாதி வெறி அரசியல்வாதிகள் வாழ விட மாட்டார்கள் என்பதை உணர்ந்த திவ்யாவும், இளவரசனும் பெங்களூருக்குப் புறப்பட்டுப் போய் விட்டனர்.

தர்மபுரி திரும்பினர்

தர்மபுரி திரும்பினர்

அதன் பின்னர் மீண்டும் தர்மபுரி திரும்பிய அவர்கள் அங்கு வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் இருந்த இளவரசனின் தந்தையுடன் தங்கினர்.

நாடோடி வாழ்க்கை

நாடோடி வாழ்க்கை

இப்படி அங்குமிங்குமாக அரசியல் கொலை வெறியர்களுக்குப் பயந்து ஓடிக் கொண்டே இருந்தனர் இளவரசனும், திவ்யாவும்.

எமனாக வந்த ஹேபியஸ் கார்பஸ்

எமனாக வந்த ஹேபியஸ் கார்பஸ்

இந்த நிலையில்தான் தேன்மொழி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் மனு போட்டார். அதுதான் இன்று இளவரசனின் மரணம் வரை வந்து முடிந்திருக்கிறது.

விரும்பித்தான் போனேன்.... மீண்டும் வலியுறுத்திய திவ்யா

விரும்பித்தான் போனேன்.... மீண்டும் வலியுறுத்திய திவ்யா

இந்த வழக்கு மார்ச் 27ம் தேதி விசாரணைக்கு வந்தபோது திவ்யா கோர்ட்டில் ஆஜர்பபடுத்தப்பட்டார். அப்போது தான் விரும்பியே இளவரசனுடன் போனதாக அவர் கூறினார்.

கடந்த மாதம் தடம் புரண்ட திவ்யா

கடந்த மாதம் தடம் புரண்ட திவ்யா

ஆனால் கடந்த மாதம் வழக்கு மீண்டும் கோர்ட்டுக்கு வந்தபோது தடம் மாறிப் போயிருந்தார். தற்போது நடந்த சம்பவங்களால் எனது மனம் மிகவும் குழம்பி போய் உள்ளது. எனவே, நான் தகுந்த முடிவு எடுக்கும்வரை எனது தாயுடன் இருக்க விரும்புகிறேன். இளவரசனுடன் பேச விரும்பவில்லை என்று கூறி விட்டு தாயாருடன் கிளம்பிப் போய் விட்டார்.

ஜூலை 1ல் மீண்டும் மாற்றம்

ஜூலை 1ல் மீண்டும் மாற்றம்

ஜூலை 1ம் தேதி மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது தனது தாயாரின் முடிவுக்கேற்ப வாழ்வேன். அவர் எனது காதல் திருமணத்தை அங்கீகரித்தால் இளவரசனுடன் சேர்ந்து வாழத் தயார் என்று கூறினார்.

வழக்கை திரும்பப் பெற்ற தேன்மொழி

வழக்கை திரும்பப் பெற்ற தேன்மொழி

இந்த நிலையில் ஜூலை 3ம் தேதி வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது வழக்கை திரும்பப் பெறுவதாக தேன்மொழி தெரிவித்தார்.

மீண்டும் சேரவே மாட்டேன்.. திவ்யாவின் திடீர் அறிவிப்பு

மீண்டும் சேரவே மாட்டேன்.. திவ்யாவின் திடீர் அறிவிப்பு

அன்று செய்தியாளர்களிடம் பேசிய திவ்யா, இளவரசனுடன் மீண்டும் சேர்ந்து வாழ மாட்டேன். கடைசி வரை எனது தாயாருடன்தான் இருப்பேன் என்று கூறியதைக் கேட்டு இளவரசன் தரப்பு பெரும் அதிர்ச்சியாகிப் போனது.

24 மணி நேரத்தில் மரணம்

24 மணி நேரத்தில் மரணம்

இதையடுத்து நேற்று காலை இளவரசன் பிணமாகி தண்டவாளத்தில் கிடந்தார்....

அழகாக பூத்த காதல், போராட்டங்களைப் பார்த்த காதல்.. கடைசியில் யாருக்குமே புண்ணியம் இல்லாமல் இப்படி பாதியிலேயே கருகிப் போய் விட்டது. தாயும், மகளும் இனி என்ன செய்யப் போகிறார்கள்....??

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+