மணிப்பூரில் தமிழக வாலிபரை சுட்டுக் கொன்ற போதை ஆசாமி கைது : தமிழ்ச்சங்கம் கண்டனம்
இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவரை போதை ஆசாமி ஒருவர் சுட்டுக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மணிப்பூர் மாநில தலைநகர் இம்பாலில் மோரேக் வார்டு சண்முகராஜ் என்ற தமிழர் ஓட்டல் நடத்தி வந்தார். இம்பாலில் மட்டும் 4 ஆயிரம் தமிழர்கள் வசிக்கிறார்கள். இவர்கள் தவிர குகிஸ், மெய்டிஸ், இந்தி பேசும் மக்கள் என அனைத்து பிரிவினரும் வசிக்கிறார்கள்.
இந்த நிலையில் நேற்று அங்கு மோட்டார் சைக்கிளில் புல்லியா என்ற போதை ஆசாமி வந்தார். இவர் எப்போதும் போதையிலேயே இருப்பார். திடீர் என்று அவர் துப்பாக்கியால் சண்முக ராஜை சுட்டார்.
இதில் தலையிலும், மார்பிலும் குண்டு பாய்ந்த நிலையில் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார் சண்முகராஜ். ஆனாலும் சிகிச்சை பலனிற்றி உயிரிழந்தார்.
துப்பாக்கியால் சுட்ட புல்லியா மோட்டார் சைக்கிளை போட்டு விட்டு தப்பி ஓடிவிட்டார்.ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் துப்பாக்கியால் சுட்ட வாலிபரை கைது செய்யக்கோரி போராட்டம் நடத்தினார்கள். அப்போது அவரது மோட்டார் சைக்கிள் தீ வைத்து எரிக்கப்பட்டது.
போலீசார் விரைந்து செயல்பட்டு துப்பாக்கியால் சுட்ட புல்லியாவை கைது செய்தனர். விசாரணையில் அவர் அசாம் ரைபிள் கேம்பில் வசிப்பவர் என்று தெரியவந்தது. சண்முகராஜ் கொலை செய்யப்பட்டதற்கு மணிப்பூர் தமிழ்ச்சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications