வீடு திரும்பினார் திவ்யா... 2 கிராமங்களில் 70 போலீஸ் பாதுகாப்பு

செல்லன்கொட்டாய் கிராமம்தான் திவ்யாவின் ஊர். அந்த ஊரில் உள்ள தனது வீட்டுக்குத் திவ்யா தனது தாயாருடன் திரும்பியுள்ளார். அதேபோல அருகில் உள்ள நாய்க்கன் கொட்டாய் நத்தம் காலனியில் இளவரசன் வீடு உள்ளது.
உயர்நீதிமன்றம் திவ்யாவுக்கும், அவரது தாயாருக்கும் உரிய பாதுகாப்பு அளிக்க உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து வீடு திரும்பிய திவ்யாவுக்கும், தாயார் தேன்மொழிக்கும் பாதுகாப்புக்காக போலீஸார் நிறுத்தப்பட்டுள்ளனர்.
செல்லன்கொட்டாய் கிராமத்தில் 2 இன்ஸ்பெக்டர்கள், 2 எஸ்.ஐ.க்கள் மற்றும் 30 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதே போல, நத்தம் காலனியில் 2 இன்ஸ்பெக்டர்கள், 2 எஸ்.ஐ.க்கள் மற்றும் 40 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இரண்டு கிராமங்களிலும் 70 போலீசார் 2 ஷிப்ட் முறையில் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், குண்டல்பட்டி அடுத்த செல்லன்கொட்டாய் செல்லும் பிரிவு சாலையிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. செல்லன்கொட்டாய் கிராமத்தில் தடுப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது. புதிதாக செல்பவர்கள் தீவிர விசாரணைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். நத்தம் காலனியில் தீயணைப்பு வாகனம் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. போலீசாருடன் கோணங்கிநாயக்கன அள்ளி கிராம நிர்வாக அதிகாரி வெங்கடாசலமும் தங்கியுள்ளார்.
கடந்த ஆண்டு அக்டோபர் 9ம் தேதி, வீட்டை விட்டு வெளியேறிய திவ்யா, மறுநாள் 10ம் தேதி இளவரசனை திருமணம் செய்துகொண்டார். கோர்ட்டில் இளவரசனை பிரிந்து தாயுடன் செல்வது என முடிவு எடுத்தார். மேலும் இனிமேல் இளவரசனுடன் சேர மாட்டேன், தாயாருடன்தான் இருப்பேன் என்று அவர் அறிவித்தார். இந்த நிலையில்தான் இளவரசனின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
இளவரசன் மரணம் திவ்யாவை வெகுவாக பாதித்துள்ளதாக தெரிகிறது. எப்போதும் அழுதபடியும், சாப்பிடாமலும், சோகமே உருவாக பிரமை பிடித்தாற் போல அவர் வீட்டுக்குள் இருப்பதாக அவரது தாயார் தேன்மொழி தெரிவித்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications