தொடரும் என்.எல்.சி தொழிலாளார் போராட்டம்: 9ம் தேதி முற்றுகைப் போராட்டம் அறிவிப்பு
நெய்வேலி: கடந்த 3ம் தேதி தொடங்கிய என்.எல்.சி தொழிலாளர் போராட்டத்தால் நெய்வேலியில் மின் உற்பத்தி படிப்படியாக குரைந்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக வரும் 9ம் தேதி முற்றுகைப் போராட்டம் செய்ய இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசு, நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. நிறுவனத்தின் 5 சதவீத பங்குகளை விற்பனை செய்ய முடிவு செய்தது. அதனை எதிர்த்து போராட்டத்தில் குதித்தனர் என்.எல்.சி தொழிலாளர்கள். இவர்கள் போராட்டத்திற்கு தடை விதித்தது சென்னை ஹைகோர்ட். ஆனால், தடை மீறி கடந்த 3ம் தேதி போராட்டத்தில் குதித்தனர் தொழிலாளர்கள்.
வேலை நிறுத்தப் போராட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களான தொ.மு.ச., அண்ணா தொழிலாளர் ஊழியர்கள் சங்கம் மற்றும் 15 தொழிற்சங்கங்களை சேர்ந்த 27 ஆயிரம் தொழிலாளர்கள் பங்கேற்றுள்ளனர். ஆனால், பொறியாளர்கள் சங்க கூட்டமைப்பை சேர்ந்த 4 ஆயிரத்து 500 பணியாளர்கள் மட்டும் பாதுகாப்புடன் பணிக்கு சென்று வருகிறார்கள்.
இவர்களின் போராட்டம் இன்றோடு 5வது நாளை எட்டியுள்ள நிலையில், வரும் 9ம் தேதி முற்றுகைப் போராட்டம் நடத்த இருப்பதாகத் தெரிவித்துள்ளார் தொ.மு.ச தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
மேலும், இது குறித்து அவர் தெரிவித்ததாவது, ‘என்.எல்.சி.யின் 5 சதவீத பங்குகளை விற்பனை செய்வதை கண்டித்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் கடந்த 10 நாட்களாக பல கட்ட போராட்டத்தை நடத்தி வந்தோம். இன்று தொடர்முழக்க போராட்டத்தை நடத்துகிறோம்.வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்காமல் பணிக்கு செல்லும் நிலத்தடி நீர் கட்டுப்பாட்டு துறை(ஜி.டப்ளியூ.சி.) தொழிலாளர்கள் அனைவரும் உடனடியாக பணியில் இருந்து வெளியேற வேண்டும்.போராட்டத்தின் அடுத்த கட்டமாக வருகிற 9-ந்தேதி(செவ்வாய்க்கிழமை) காலை 5 மணிக்கு 1-வது அனல்மின் நிலையம் முன்பு அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் மிகப்பெரிய முற்றுகை போராட்டம் நடத்துவோம். இப்போராட்டமானது பணியில் உள்ள அதிகாரிகள் வெளியே வரும் வரையில் நடைபெறும்' என .இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications