என்.எல்.சி போராட்டத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க ஹைகோர்ட் மறுப்பு
சென்னை: என்.எல்.சி. தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
என்.எல்.சி நிறுவனத்தின் 5 சதவிகித பங்குகளை விற்பனை செய்வதை எதிர்த்து 30,000த்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து என்எல்சி நிறுவன நிர்வாகம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த வாரம் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் என்.எல்.சி. தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதி டி.அரிபரந்தாமன் விசாரித்தார். இந்த மனுவுக்கு 2 வாரத்துக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று 17 தொழிற்சங்கங்களுக்கு நோட்டீஸ் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து என்எல்சி சார்பில் அவசரம் அவசரமாக அப்பீல் தாக்கல் செய்யப்பட்டது. இதை தலைமை நீதிபதி பொறுப்பு வகிக்கும் ராஜேஷ் குமார் அகர்வால், நீதிபதி ராஜா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது.
மனுவைவிசாரித்த நீதிபதிகள் அவசர உத்தரவைப் பிறப்பித்தனர். அதில், ஒட்டுமொத்த நிலவரத்தையும் கருத்தில் கொண்டு, பிரச்சினை தொடர்பான பேச்சுவார்த்தை முடியும் வரை, 3-ந் தேதி நள்ளிரவில் இருந்தோ அல்லது வேறு தேதியில் இருந்தோ, காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்துவதற்கு 17 தொழிற்சங்கங்களுக்கும் தடை விதிக்கிறோம். இந்த அப்பீல் வழக்கில் 17 தொழிற்சங்கங்களும் பதில் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பப்படுகிறது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
எனினும் தடையை மீறி போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தடையை நீக்கக் கோரி என்.எல்.சி. தொழிலாளர்களின் சார்பில் வழக்கறிஞர் ரமேஷ் தாக்கல் செய்த மனு, நீதிபதி ஆர்.கே. அகர்வால் முன்பு விசாரணைக்கு வந்தது. வேலை நிறுத்தத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க மறுத்த நீதிபதி, தொழிலாளர்கள் முதலில் நீதிமன்ற உத்தரவை பின்பற்றட்டும், மனு மீதான விசாரனையை பிறகு பார்க்கலாம் என்று தெரிவித்தார்.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications