கிரானைட் மோசடி: பி.ஆர்.பி. மீது புதிய வழக்கு; மதுரை புது கலெக்டரும் அதிரடி!

சட்ட விரோதமாக அரசு நிலங்களை ஆக்கிரமித்து கிரானைட் முறைகேட்டில் ஈடுபட்டு வந்த பி.ஆர்.பி. மீது அதிரடி நடவடிக்கை எடுத்த மதுரை கலெக்டர் அன்சுல் மிஸ்ரா சமீபத்தில் வேறு துறைக்கு மாற்றப்பட்டார்.
கலெக்டர் மாற்றத்துக்கு முழுக்காரணம் பி.ஆர்.பி. மீது தொடர்ந்து நடவடிக்கை எடுத்தது தான் என்றும் அதற்கு ஆளுங்கட்சியின் நான்கு எம்.எல்.ஏக்கள், முதல்வரிடம் கொடுத்த பொய்ப் புகார்தான் காரணம் என்றும் பேசப்பட்டது. இதனையடுத்து புது கலெக்டராக எல்.சுப்ரமணியன் கடந்த ஞாயிறன்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவர் பதவி ஏற்றுக் கொண்ட மூன்றாவது நாளே அதிரடி உத்தரவு பிரப்பித்து பி.ஆர்.பி. மீது மேலும் புதிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நிலமோசடி, மிரட்டல்
மதுரை அனுப்பானடியை சேர்ந்தவர் வெங்கட சுப்பு, கீழவளவு அருகே சோலைராஜன் என்பவரிடம் 10 ஏக்கர் நிலத்தை லீசுக்கு எடுத்து விவசாயம் செய்து வந்த நிலத்தையும், அருகிலிருந்த அரசு நிலத்தையும் பி.ஆர்.பி.யும், சிந்து கிரானைட் செந்தில்குமாரும் வளைத்து போட்டது மட்டுமல்லாமல் நிலத்தின் உரிமையாளரையும் மிரட்டியுள்ளனர். அவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் நில அபகரிப்பு, மிரட்டல் விடுத்தல் போன்ற பிரிவுகளில் கீழவளவு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
புது கலெக்டர் கட்சிக்காரர்கள் சொல்வதைக்கேட்டு நடந்து கொள்வார் என்றும், இனி கிரானைட் முறைகேட்டில் ஈடுபடுபவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால்
புதிய கலெக்டரின் இந்த அதிரடி உத்தரவு பி.ஆர்.பி. ஆதரவு ஆளுங்கட்சி எம்.எல்.ஏக்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications