இளவரசன் உடல் தடயவியல் சோதனை.. திருமா. மனுவுக்கு பதிலளிக்க அரசுக்கு உத்தரவு

Subscribe to Oneindia Tamil

Thiurmavalavan seeks removal of 144 ban
சென்னை: இளவரசன் உடலில் மறு பிரேதப் பரிசோதனை செய்யும்போது தமிழகத்தைச் சேர்ந்த தடயவியல் நிபுணர்களைப் பயன்படுத்த வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் விடுத்துள்ள கோரிக்கை குறித்து பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இளவரசனின் மறு பிரேத பரிசோதனையின் போது மருத்துவ தடயவியல் நிபுணர்களை பயன்படுத்தாமல் தமிழக அரசு தடயவியல் நிபுணர்களைப் பயன்படுத்த வேண்டும் என்று வழக்கு தொடுத்துள்ளார்.

மேலும் இளவரசன் மரணம் பற்றி தடயவியல் துறை முன்னாள் இயக்குனர் விசாரிக்க கோரியும் திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் இதுகுறித்து நாளைக்குள் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

144 தடையை நீக்குக

இதற்கிடையே, தர்மபுரி மாவட்டத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ள போலீஸ் 144 தடை உத்தரவை நீக்க வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் இன்னொரு மனு செய்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், 144 தடை உத்தரவு அரசியல் கட்சித் தலைவர்களுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டு வருகிறது. நவம்பர் 7ம் தேதி சம்பவத்துக்குப் பிறகு தருமபுரி மாவட்டத்துக்குள் என்னால் நுழைய முடியவில்லை.

தருமபுரி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்காக திரட்டி வைக்கப்பட்டுள்ள நிவாரணப் பொருட்களை பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்க முடியவில்லை.

இளவசரன் மரணத்துக்கு அஞ்சலி செலுத்தவும் 144 தடை உத்தரவு தடையாக உள்ளது. 144 தடை உத்தரவு அரசியல் கட்சிகளுக்கு எதிராக சட்ட விரோதமான முறையில் அமல்படுத்தப்பட்டு வருகிறது. எனவே, 144 தடை உத்தரவை பிறப்பிக்க தடை விதிக்க வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+